Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவை - 5.0 out of 5 based on 2 votes

" ரமா! எனக்குத் தெரிந்து, நமக்கு மீறிய சக்தி ஒண்ணு இருக்குங்கறதை மறுக்கலே, ஆனா அந்த சக்தி எதுங்கறதிலேதான் வித்தியாசம். ஒருத்தர் 'இயற்கை' என்கிறார். இன்னொருவர் 'ஏசு' என்கிறார், இதைப்போல, 'அல்லா', 'சிவன்', 'விஷ்ணு' என்று அவரவர்களுக்குப் பிடித்த ஒரு பெயரை சொல்கிறார்கள். ரமா! 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்'னு பழமொழி கேட்டிருக்கியா? கடவுளை பார்த்தவர் சொல்லுவதில்லை, சொல்பவர்கள் பார்த்ததில்லை என்று அர்த்தம். ......"

" எனக்கு என்ன தோணுதுன்னா, தாத்தா! 'கடவுள்' என்கிற கான்செப்டே ஒரு கற்பனை! நம்மை மீறிய சக்தி இருக்கிறதை அடிக்கடி உணருகிறோம், அதனாலே, மனசிலே உண்டாகிற வலியை மறக்க அந்த மந்திரச் சொல், 'கடவுள்' பயன்படுகிறது. 'கடவுள்பேரிலே பாரத்தைப் போட்டுவிட்டு, வேலையைப் பாரு'ன்னு சொல்றாங்க, இல்லையா....."

" வெரி குட்! கரெக்டா புரிஞ்சிக்கிட்டே! இப்ப சொல்லு, மனிதன் எப்பவும் நிம்மதியாயிருக்கமுடியுமா? முடியும்னா, எப்படி?"

" தாத்தா! நான் ஒரு ஊகமா சொல்றேன், நீ அதை சரிபண்ணு! ....நமக்கு அடுத்த நிமிஷம் நடக்கப்போவது தெரியாது, நடக்கிறதும், ஏன், எதற்கு, எப்போ, யாருக்கு, நல்லதா, கெட்டதா எதுவும் உறுதியா விளங்காமலே, வாழ்கிறோம், இது எப்படி இருக்குன்னா, ஒரு பழமொழி சொல்வாங்களே, 'ஆட்டுவிப்பான், ஆட்டுவித்தால், ஆடாதார் யார்'னு, அது போல, நம்மையும் உலகத்தையும், இன்னிக்கும் என்னிக்கும், நம்மை மீறிய அந்த மகாசக்தி ஆட்டுவிக்கிறது, பொம்மலாட்டம் போல! நாமெல்லாம் வெறும் ரோபோக்கள்! அதனாலே, நமக்கு எந்த பொறுப்போ, கடமையோ, உரிமையோ, கிடையாது. நாம் ஜாலியா சும்மா இருந்தாலே போதும். நமக்கு உடைமைகளும் கிடையாது, இழப்பும் கிடையாது, லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை, பிறந்த சின்னக் குழந்தைமாதிரி வானத்தைப் பார்த்து சிரிச்சிண்டு, கையை காலை உதைச்சிண்டு, கொடுக்கிற பாலை குடிச்சிண்டு, தூக்கம் வந்தா தூங்கிண்டு நிம்மதியா இருப்போம், சரியா தாத்தா?"

" மார்வெலஸ்! ஆனா, ரமா!, நம்மாலே சும்மா இருக்கமுடியாதே, கையும் காலும், மனசும், வாயும் துருதுருன்னு துடிக்குமே, அப்ப என்ன பண்றது?"

" தாத்தா! நீ சொல்ற அத்தனை விஷமங்களும் செய்வது, அந்த மகாசக்திதானே! விளைவுகளை ஏற்படுத்துவதும் அதுதானே! நமக்கு அதற்கும் சம்பந்தமேயில்லை,.........."

" இப்படிச் சொல்லலாமா, ரமா? நம்ம உடலை, மனதை, அறிவை, சிந்தனையை இயக்குவது, நமக்குள்ளேயே இருக்கிற அந்த மகாசக்திதான்! அது, நமக்குள்ளேயும் இருக்கிறது, வெளியேயும் இருந்து எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறது!"

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைAbiMahesh 2019-04-09 20:44
Great Story Sir! Romba deep thoughts and lot to learn from you Sir.. :thnkx: for this story Sir :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 21:31
Dear Abhimahesh! Start learning initially ultimately to unlearn the whole lot! Life is a mirage! Meant for exclusively happiness!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைViji. P 2019-04-09 14:09
Ungal ovvoru sirukathaiyilum oru azamana karuthu irukkirathu Sir. Ithai padippathanal en manamum pakkuvappadum endru nambukiren sir. :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 16:36
நிச்சயமாக, விஜி! என் இலட்சியமே, அதுதான்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! எனக்கு கிடைத்துள்ள தெளிவும் புரிதலும் எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்பதே என்ஆசை!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-09 07:01
அன்புள்ள கர்ணா! என்மீதுள்ள அன்பால் அதிகமாகவே பாராட்டியுள்ளீர்கள்! மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைkarna 2019-04-08 21:14
எவ்வளவு ஆழமான விஷயத்தை இப்படி இவ்வளவு எளிமையாக சொல்ல உங்களால் தான் முடிகிறது.உங்கள் ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு கோணம்.அருமை அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைAdharvJo 2019-04-08 18:09
Can't the creator see himself in his creation :Q: Universal mystery!!
well balanced uncle :hatsoff: :clap: :clap: really oru heavy concept thaan :yes:

Thank you and keep rocking. Great Evening!!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 18:13
Thanks Jo!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைmadhumathi9 2019-04-08 14:52
:clap: :hatsoff: arumaiyaana kathai. :clap: :yes: neengal solvathai eatrukilla thaan vendum. :thnkx: :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 17:26
மதுமதிம்மா! பெற்ற குழந்தையை ஓடிவந்து தூக்கி அணைத்து கொஞ்சுகின்ற தாயைப்போல, என் கதை பிரசுரமானவுடனேயே படித்து உடனே பாராட்டுகிற தங்கள் பாசத்துக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைJebamalar 2019-04-08 12:55
எல்லாவற்றிலும் எல்லாமுமாக கடவுள் இருக்கிறார்... அவர் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது... எனவே எதற்கும் கவலை படாமல் சந்தோஷமாக இருக்கலாம்... அருமையான கதை.. சரியான நேரத்தில் சரியான கதையை கொடுத்திருக்கிறீர்கள். :clap: நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவைரவை 2019-04-08 17:23
Dear Jebamalar! தங்கள் தாராளமான பாராட்டு என்னை நெகிழவைக்கிறது. மிக்க நன்றி.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top