(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - எதிர்த்து நின்று வெல்வோம்! - ரவை

couple

நானும் என் மனைவியும் வீதியில் நடக்கும்போது, எதிர்ப்படுகிற அத்தனைபேரும், சிறுவன் முதல் கிழவன் ஈறாக, ஆண், பெண் இருபாலாரும், கண் கொட்டாமல், பார்ப்பார்கள், என்னையல்ல, என் மனைவியை!

அதற்கு அவள் ஆடையலங்காரம் காரணமல்ல, அவள் அழகுதான்!

 இந்தக் காட்சியை நான் மிகவும் ரசிப்பேன், அத்தனை அழகான மனைவியை அடைந்ததற்கு கர்வப்படுவேன்!

 என் மனைவி இதை லட்சியமே செய்யமாட்டாள். வளவளன்னு ஏதோ பேசிக்கொண்டே வருவாள், என்னுடன்!

 " லீலா! எதிர்க்க வருகிற அத்தனைபேரும் உன்னை கண்கொட்டாமல் பார்ப்பதை நீ கவனித்திருக்கிறாயோ?"

 " அவங்க, என்னை பார்க்கலை, கடவுள் எத்தனை அழகா என் உடலை படைத்திருக்கிறான், பார்!னு படைப்பை ரசிக்கிறார்கள்......."

 " அப்படியா சொல்றே? அவர்கள் பார்வைக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையா?"

 " ரகு! ஒரு விஷயத்தை மறக்காதே! இவங்க என்னைப் பார்க்கிறது உண்மைன்னா, நான் அழகாயில்லாவிட்டால் பார்ப்பாங்களா? வயதாகி, தோல்சுருங்கி, கிழடு தட்டியபிறகு பார்ப்பாங்களா? என்னைப் பார்ப்பவர்கள் எப்போதும் எந்த நிலையிலும் பார்த்தால், அவர்கள் என்னை பார்ப்பதாக ஒப்புக்கொள்வேன்!"

 " நீ சொல்றது சரி, ஆனால் அந்தமாதிரி உலகத்திலே யாருமே இருக்கமாட்டார்கள்........!"

 " ஏன்? நீ இல்லையா? என்னைப் பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், தோழிகள், என் உறவினர்கள் என்னைப் பார்க்கும்போது, என் உருவத்தை பார்ப்பதில்லை, என்னை பார்க்கிறார்கள், என்னுடன் பழகிய அனுபவங்களை பார்க்கிறார்கள், நான் அவர்கள்மீது செலுத்திய அன்பை பார்க்கிறார்கள், அவர்களுக்கு நான், என் தோற்றமல்ல, உருவமல்ல, என்னைப் பற்றிய நினைவு, என் உறவு!"

 " லீலா! படைத்தவன் உனக்கு அழகோடு அறிவையும் அபரிமிதமாக அள்ளித் தந்திருக்கிறான்!"

 " நீயும் இனிமேல், என் அழகுக்காக மட்டும் கர்வப்படாமல் என் விழிப்புணர்வுக்காகவும் கர்வப்படு! இல்லை, இல்லை, கர்வத்தை விடு! படைத்தவனுக்கு நன்றி சொல்லு! உனக்கும் தந்திருக்கிறான், அதையும் நினைத்துப்பார்!"

 இப்போது சொல்லுங்கள், இந்த அளவுக்கு விவேகம் உள்ளவள், அந்தமாதிரி கோபமாக நடந்துகொள்ளலாமா?

 அன்று வீட்டில் லட்சுமி பூஜை! அது முழுக்க முழுக்க, பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது என்பதால், நான் என் அறைக்குள்ளே சில்ஸீ கதைகளை படித்துக்கொண்டிருந்தேன். அதிலும் சாகம்பரி குமார், தேவி, ஶ்ரீ, பத்மினி, சந்யோகிதா போன்ற சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை திரும்பத் திரும்ப படித்து மகிழ்ந்தேன். தவிர, அனுஷாவின் ஜோக்ஸ்! தனியாக சிரித்துக்கொண்டிருந்தேன், யாராவது பார்த்தால், பைத்தியமோ என நினைத்திருப்பார்கள்.

 எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறதெற்கென்றே, பிறவி எடுத்தவர்கள் போல, அதர்வா ஜோ, மதுமதி9 இருவரும் எல்லா படைப்புகளையும் உடனுக்குடன் படித்து விளக்கமாக அவைகளை பாராட்டி விமரிசனம் செய்வதைப் படித்து வெகுவாக ரசிப்பேன்.

 அவர்கள் தந்த உற்சாகத்தில் ஒரு முதியவர், படுத்தற பாடு! சகிக்கலை!

 பொழுது விடிஞ்சா அவருடைய கதையோ, கவிதையோ, படித்ததில் பிடித்ததோ, மேற்கோள்களோ இல்லாமல் இருக்காது, சில்ஸீயிலே!

 பற்றாக்குறைக்கு, வேற ஒரு அறிஞர் எழுதின ஆங்கில நூலை மொழிபெயர்த்து வாராவாரம் கட்டுரையாக தருகிறார்!

 அவருடைய அஷ்டாவதானத்துக்கு பொருத்தமான பெயர், அவருக்கு! 

 'ரவை'!

 ரவையை வைத்து, கேசரி, தோசை, இட்லி, உப்புமா, கிச்சடின்னு சகலமும் தயாரிக்கிறதுபோல, இவர் எல்லா துறைகளிலும் புகுந்து வெளிவருவார்.

 திடுமென, உரத்த குரலில், லீலா வசைமாரி பொழிவதைக் கேட்டேன், அடுத்து வெண்கலத் தாம்பாளத்தால் யார் தலையிலோ மொட்டென்று ஓங்கியடித்த சத்தம்! வெளியே ஓடிவந்து பார்த்தேன்!

 லீலா பூஜையை நடத்தித்தர வந்திருந்த அறுபது வயது புரோகிதரை தாக்கிக் கொண்டிருந்தாள். முதலில் அவளை தடுத்தேன். அதற்குள் அந்த புரோகிதர் எழுந்து ஓட்டம் பிடிப்பதை பார்த்தேன்.

 " என்ன நடந்தது?"

 " பொறுக்கி ராஸ்கல்! அறுபது வயசிருக்கும், அல்பத்தனம் போகலே, இவனெல்லாம் மந்திரம் சொல்லவந்ததனாலேதான், எல்லாருக்கும் பூஜை பண்றதிலே நம்பிக்கையே போச்சு!"

 " லீலா! என்ன பண்ணினார்?"

 " வந்தவுடனேயே, 'உனக்கு மடிசார் கட்டு பிரமாதமா இருக்கு'ன்னு அசடு வழிஞ்சான், அப்புறமா 'நீயே லட்சுமி மாதிரி தேவதையா தெரியறே!உனக்கு மத்தவங்க செய்யணும் பூஜை!'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.