(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - கிளம்பிட்டாரு, காலையிலே! - ரவை

Gandhi

"கிளம்பிட்டாருகாலையிலே, ஊர் பெருக்க! ஏன்யா! எவ்வளவு சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா? நான் இந்த வீட்டுக்குள்ளே நீ என் கழுத்திலே கட்டின தாலியோட, என்னிக்கி நுழைஞ்சேனோ, அன்னியிலிருந்து, இந்த நிமிஷம் வரை, என்னிக்காவது ஒருநாள், ஒரு நிமிஷம், இந்த வீட்டைப்பற்றி நினைச்சிருப்பியாய்யா? எப்பப்பார், ஊர் தொண்டு, மக்கள் சேவை! எவனாவது ஒருத்தன் உன்னை மதிக்கிறானா? நீ ஒரு அப்பாவிய்யா! உன்னைப்பற்றி ஜனங்க என்ன நினைக்கிறாங்க, தெரியுமா? 'வந்துட்டான்யா, நம்ம வேலையை கெடுக்க! இவன் தொல்லை தாங்கலை, நான் ஊரிலே இல்லே, வர ஒரு மாசம் ஆகும்னு சொல்லிடு'ன்னு ஓடி ஒளிஞ்சிக்கிறாங்கய்யா! கேவலமாயிருக்குய்யா! சத்தியமா சொல்றேன்யா, உன்னை இந்த ஊர் பைத்தியம்னு பட்டம் கட்டி ஒதுக்கிட்டாங்கய்யா!.............."

 ஆர்.கே. என்று மக்களால் சுருக்கமாக அழைக்கப்படும், ( முழுப் பெயரைச் சொல்லக்கூட அவர்களுக்கு நேரமில்லை) ஆர். கருணாகரன், மனைவியின் சொற்களை சிறிதும் பொருட்படுத்தாமலே, செருப்பை மாட்டிக்கொண்டு, வெளியே போய்விட்டார்!

 " அத்தை! அவரு, நீ பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளைதானே, நான் தினமும் தொண்டை வரள, கத்தறேனே, நீயும் சேர்ந்துக்கப்படாதா? உன்னைமாதிரி பெரிசுங்க சொன்னாலாவது கேட்கமாட்டாரான்னு நான் ஏங்கறேன்! அத்தை! நேத்தி ஒரு திமிர் பிடிச்ச பொம்பள, வீட்டுப்படியேறி, அவரு இல்லியான்னு கேட்டா! இல்லேன்னதும், அவரு வந்தா, உடனே என் வீட்டுக்கு வரச்சொல்லு, சாக்கடை அடைச்சிக்கிட்டு, வூடெல்லாம் நாத்தம், வயத்தை குமட்டுதுன்னா!

 கார்ப்பரேஷன்லே சொன்னா, ஆள அனுப்புவாங்க, இவரு எதுக்கும்மா?ன்னு கேட்டேன்.

 அந்த திமிர் பிடிச்சவ சொல்றா, இவரு வந்தார்னா, இவரே சாக்கடையிலே இறங்கி, கையாலே தூர் வாரி, சுத்தம் பண்ணிடுவாருன்னா,

 நான் கேட்டேன், ஏம்மா! உன் வீடு, நீ அத செய்யமாட்டியா, இவருதான் செய்யணுமா?ன்னு கேட்டேன். 

 ஐய! கிட்டக்க போனாலே, குமட்டுது, என்னால முடியாதுன்னு சொல்லிட்டு நடையை கட்டிட்டா! 

 அத்தை! உன் புள்ள, கைநாட்டா என்ன, கண்ட வேலையை இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யறதுக்கு? வக்கீலுக்கு படிச்சு, கருப்பு கோட்டு போட்டுக்கிட்டு, கோர்ட்டிலே பேசி, எத்தனை கேசு ஜெயிச்சிருக்கார், தெரியுமா? ஆனா, வருமானம் பூஜ்யம்! ஏன்னா, காசு வாங்காத வக்கீல்! ஏழைங்க வக்கீல்!

 அத்தை! உன் புருசன், என் மாமா, சொத்து வைச்சிட்டு போனாரோ, பொழச்சமோ, இல்லேன்னா, நாம நடுத்தெருவிலேதான் நிக்கணும்!

 ஆமா, நான் தெரியாமத்தான் கேட்கறேன், நீ என்ன செவிடா, உன் புள்ள மாதிரி, நான் மணிக்கணக்கிலே பேசினாலும் வாயத் துறந்து ஒரு வார்த்தை பேசமாட்டாங்கறே? பேசு, அத்தை! நான் கேட்கறது தப்புன்னா, செருப்பால அடி, அத்தை! ஆனா, இப்படி பேசாம என்னை சாகடிக்காதே, அத்தை!"

 காலில் விழுந்து அழுத மருமகளை, கைதூக்கிவிட்டு எழுப்பி, அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள்!

 " மருமகளே! நீயாவது உன் புருசனுக்காக மட்டும் அழறே! ஆனா, மனசுலே உள்ளதை வெளியில கொட்டி தீர்த்து மனச லேசாக்கிக்கிறே!

 ஆனா நான் உன் புருசனுக்காகவும் அழறேன், உனக்காகவும் அழறேன்! வெளியிலே சொல்லி தீர்த்துக்க முடியாம, உள்ளுக்குள்ளேயே, குமுறி குமுறி தினமும் செத்துக்கிட்டிருக்கேன்!........"

 மருமகள் தலையை தூக்கி அத்தையை ஏறிட்டு நோக்கினாள்.

 " என்கிட்டகூட சொல்லமுடியாமயா, அத்தை?"

 " ஆமாண்டா கண்ணு! நீயும் குழந்தையாத் தான்டா இருக்கே! என் புள்ள ஒருமாதிரின்னா, நீ வேறமாதிரி! உன்னை என்னால கோவிச்சிக்கவும் முடியலே, திருத்தவும் தெரியலே......"

 " அத்தை! என்னை நீ, உன் வயத்துல பொறந்த பொண்ணா நடத்தறே! உனக்கு சம்மதம்னா, நான் இனிமே உன்னை 'அம்மா'ன்னே கூப்பிடறேன், என்னை கண்டிக்கற எல்லா உரிமையும் உனக்குண்டு! சொல்லும்மா!"

 மருமகளை இறுக அணைத்து பேசமுடியாமல் விக்கினாள், அத்தை!

 சில மணித்துளிகளில், சுதாரித்துக்கொண்டு, பேசினாள்.

 " மகளே! போன வருசம் உங்க மாமா, என் புருசன், ஏன் செத்துப்போனார்னு தெரியுமா? என் புள்ள ஒருமாதிரி அப்பாவின்னா, நீயும் சூதுவாது தெரியாத பச்சக் குழந்தையா இருக்கே!..........உன் மாமாவுக்கு, ரெண்டு, இல்ல, இல்ல, மூணு குறை! ஒண்ணு, ஒத்தப் புள்ள, அதான் உன் புருசன், ஊர் உலகத்துல எல்லா புள்ளங்களும் இருக்கறாப்பல இல்லாம, வித்தியாசமா இருக்கானே, அவனை மாத்த முடியலியேங்கறது!

 ரெண்டாவது, வீட்டுக்கு வந்த மருமகளும், புருசனை மயக்கி வசியம் பண்ணி தன்கிட்ட நெருக்கமா இழுத்துக்கமுடியலியேங்கறது! 

 மூணாவது, நாங்க ரெண்டு பேருமே பல வருசமா கடவுள வேண்டிக்கிட்டும் நடக்கலியேங்கறது, அதாம்மா, உன் வயத்துல, ஒரு புழு, பூச்சி வக்கலியேங்கறது! 

 இத உங்கிட்ட புலம்பினா, உன்னால என்ன செய்யமுடியும்? நீயும் சேர்ந்து அழுவே! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.