(Reading time: 10 - 20 minutes)

 " வேணாம்யா! நான் கெட்டுப்போனவய்யா! வேற நல்ல பொண்ணா கிடைப்பாய்யா!"

 யாரோ வருவதுபோல சத்தம் கேட்கவே, விக்ரம்சிங் நகர்ந்தான்.

 அவன் நகர்ந்ததும், அந்த மாளிகையில் வேலை செய்யும் பொம்பளைங்க ரெண்டுபேர் உள்ளே நுழைந்தனர்.

 அவர்களிடம் ஒரு பதட்டம் தென்பட்டது. ஏதோ முக்கியமான விஷயத்தை மிலிடரி வருவதற்குமுன் அவளிடம் தெரிவித்துவிட வேண்டும் என்ற அவசரம் தெரிந்தது.

 " உன்னைப் பார்த்தா, கிராமத்துப் பொண்ணுபோல தெரியுது, இந்த வாட்ச்மெனையும் மிலிடரியையும் நம்பாதே! இவன் மிலிடரியிலே வேலை செய்தாங்கிறதே பொய்! அதேபோல, வாட்ச்மென் தனக்கு இன்னும் கல்யாணமே ஆகலேன்னு சொல்றதும் பொய்! இவனுங்க ரெண்டு பேரும், திட்டம் போட்டு, வயசுப்பொண்ணுங்களை ஏமாத்தி, வெளிநாட்டு ஷேக்குங்களுக்கு வித்து பணம் பண்ற கும்பல்! இவங்க ரெண்டு பேர் மட்டுமில்லே, இது ஒரு பெரிய கேங்க்! 

 நாங்க சொல்றதிலே நம்பிக்கையில்லேன்னா, பக்கத்து வீட்ல, எதிர்த்த வீட்ல, விசாரிச்சு தெரிஞ்சுக்க! இங்கிருந்து தப்பிக்கிற வழியைப் பாரு, முதல்லே!"

 இருவரும் ஓடிப்போய் விட்டார்கள்.

 எச்சுமிக்கு யாரை நம்புவதென தெரியாமல் திகைத்தாள்!

 வாக்கிங் முடிந்து, மிலிடரி வீடு திரும்பும்போது, கூடவே வாட்ச்மெனும் வந்தான். 

 " எச்சுமி! உனக்கு நல்லகாலம் பொறந்திடிச்சி! இதோ நிக்கறானே, மீசைக்காரன்! இவன் உன்னை கட்டிக்கறேங்கறான், இவனை எனக்கு பல வருஷமா நன்னா தெரியும்! நல்லவன். நாணயமானவன். தப்புத் தண்டா எதுக்கும் போகமாட்டான். அவன் இங்கேயே மாடிப்படிக்கு கீழேயிருக்கிற சின்ன ரூமிலேதான் குடியிருக்கான், எப்பவும் இங்கதான் இருப்பான், அதனால நானும் உங்க ரெண்டு பேரையும் கவனிச்சிக்க சௌகரியமாயிருக்கும். யோசிச்சு உன் முடிவைச் சொல்லு! நாலைஞ்சு நாள் ஆனாலும் பரவாயில்லே, சரியா?"

 எச்சுமிக்கு யாரை நம்புவதென புரியவில்லை! அவளுக்கு புத்தியில் பட்டது, ஒரே வழிதான்! 

 வேலக்கார பொம்பளைங்க சொன்னாப்பல, அக்கம் பக்கத்திலே விசாரித்து உண்மையை தெரிஞ்சிக்கறதுதான்!

 சமயம் பார்த்து, பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

 " வா, வா! பார்த்தா கிராமத்துப்பொண்ணா தெரியறே, போயும் போயும் இவங்ககிட்டயா மாட்டிப்பே? இவங்க ரெண்டு பேரும் போலீஸை கைக்குள்ளே போட்டுக்கிட்டு ஏதோ தில்லுமுல்லு செய்றாங்கன்னு தெரியுது, ஆனா என்னங்கறது தெளிவா புரியலே! நீ எதிர்த்த வீட்டிலேயும் விசாரி! நல்ல முடிவா எடு!"

 எச்சுமி, இன்னொருநாள், சமயம் பார்த்து, எதிர்த்த வீட்டில் நுழைந்தாள். அங்கு வீட்டு பெரியவர்தான் இருந்தார். பெண்கள் எவரும் கண்ணில் படவில்லை! அவரிடம் நெருங்கி அமர்ந்து ரகசியமாக விசாரித்தாள். 

 அந்தப் பெரியவர், உடனே, எழுந்துபோய் வீட்டுக் கதவை சாத்தி தாளிட்டார்.

 எச்சுமியின் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தார்.

 ஏதோ சொல்ல தயங்கினார். பிறகு, அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டு, ரகசியமாக அவள் காதுக்குள் பேசினார்.

 பேசிக்கொண்டே, அவள் உடல் முழுவதும், யதேச்சையாக தொடுவதுபோல், தடவிக்கொண்டே பேசினார்.

 " நாலுபேர் நாலுவிதமாத்தான் பேசுவாங்க! எது உண்மைன்னு உடனே தெரிஞ்சிக்க முடியாது. ஆனா, ஏதோ தப்பு நடக்குதுன்னு மட்டும் தெரியுது! நீ என்ன பண்ணு! இங்கேயே இன்னும் கொஞ்சநாள் தங்கியிரு. அப்பப்ப, என்னை வந்து பாரு! நானும் விசாரிக்கிறேன், நல்ல பொண்ணாயிருக்கே! நான் உன்னை பார்த்துக்கிறேன்." என்று பாசமுடன் பேசிக்கொண்டே, தன் சபலத்தை முழுவதும் தீர்த்துக்கொண்டார்!

 எச்சுமிக்கு தோன்றியதெல்லாம், " இந்த உலகத்தில பெத்த அப்பனையும், உடன்பிறந்த அண்ணன் தம்பிகளையும்கூட, நம்ப முடியாது போலிருக்கே! எத்தனை வயசானாலும் வெறி பிடித்து அலையறாங்களே! அப்படியென்ன இருக்கு இந்த பொம்பளை உடம்பிலே? ரெண்டு மேடு, ஒரு பள்ளம்! இதுக்கா இப்படி நாயா, பேயா அலையறாங்க?" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.