(Reading time: 10 - 19 minutes)

 அடுத்த வினாடியே புயலென வீட்டுக்குத் திரும்பிய பண்ணையார் மனைவி, 'கொடுவாளினை எடுடா, கொடியோன் செயல் அறவே' என பத்ரகாளியாக மாறினாள்.

 பண்ணையார், வழக்கம்போல, 'சின்ன வீட்டில்' குடிபோதையில் மயங்கிக் கிடக்க, மூத்த மகன் தனதறையில் தூங்கிக்கொண்டிருக்க, பண்ணையாரின் மனைவி, அந்த அறைக்குள் கொடுவாளை கையில் ஏந்தியவாறு நுழைந்து

ஆத்திரமும் கோபமும் தீருகிறவரைக்கும் மகனை கண்டதுண்டமாக வெட்டிச் சாய்த்துவிட்டு, காவல் நிலயத்தில் வாளுடன் சரண் அடைந்தாள்!

 இன்ஸ்பெக்டர், காவலில் இருந்த பண்ணையாரின் மனைவியின் எதிரில் நின்று, இருகரங் கூப்பி, கண் கலங்க, " அம்மா! பொதுவா, 'ஒரு தாய் இப்படி செய்யலாமா'ன்னு கேட்பாங்க! ஆனா, எனக்குப் புரிகிறது, நீங்க ஒரு காமுகனுக்கு தாயாக வாழ்வதை வெறுத்து ஒதுக்கி, பெண்குலத்தின் மானத்தை காக்கவந்த காளியாக மாறிவிட்டீர்கள்! உங்களைப்போல, எல்லாப் பெண்களும் துணிந்து தற்காப்புக்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர, வேறுவழி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அம்மா! என்னால் முடிந்த அளவு, உங்களை தண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டப்படி செய்யக்கூடிய எல்லாம் கட்டாயம் செய்கிறேன், தைரியமாயிருங்க!"

 பண்ணையாரின் மனைவி வாய்விட்டு சிரித்தாள்.

 " நீங்க எப்படித்தான் இன்ஸ்பெக்டர் பதவிக்கு வந்தீங்களோ, புரியலே எனக்கு! இத்தனை அப்பாவியா இருக்கீங்கிளே!"

 " என்னம்மா சொல்றீங்க?"

 " என்ன நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியும். நான் அதற்கும் தயாராகத்தான் இருக்கிறேன், என் ஒருத்தியினால் உலகத்தையே திருத்தமுடியாது, ஆனால் இந்த கீழூரிலாவது இனி பெண்கள் துணிந்து கையில் ஆயுதம் ஏந்தி, தங்களை காத்துக் கொள்ள முன்வருவார்கள் என நம்புகிறேன்......."

 " அதுசரி, என்ன நடக்கப்போகுதுன்னு சொல்றீங்க?"

 " பண்ணையார் இங்கே வரவே மாட்டார், வீட்டிலிருந்தே உங்க மேலதிகாரிங்களிடம் பேசுவாரு, ரெண்டு விஷயம் உறுதி! முதல்லே, உங்களை இந்த ஊரிலிருந்து வேற இடத்துக்கு அனுப்பிடுவாங்க! இரண்டாவது, என்னை தீர்த்துக் கட்டிட்டு நான் தற்கொலை செய்துகொண்டதா ஜோடிச்சிருவாங்க! என்னை கோர்ட்டுக்கு அழைத்துப் போனா, நான் எல்லா உண்மைகளையும் சொல்லிடுவேங்கிற பயத்திலே, பண்ணையாருக்கு மட்டுமில்லே, உங்க மேலதிகாரிகளுக்கும்தான், அதுக்கு முன்பே என் கதையை முடிச்சிட்டு முதலைக்கண்ணீர் வடிப்பாங்க! போங்க, இன்ஸ்பெக்டர்! வீட்டுக்குப் போய், பெட்டி படுக்கையை கட்டி வைச்சுக்குங்க, வேற ஊருக்குப் போக!"

 இவ்வளவு தெளிவாகப் பேசுகிற, துணிவுடன் எதிர்க்கிற, கொடுவாளை ஏந்துகிற பெண்மணிகள்தான் இன்றைய இந்தியாவுக்கு அவசரத் தேவை! என இன்ஸ்பெக்டர் பெருமூச்சு விட்டார்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.