(Reading time: 11 - 21 minutes)

 தனபால் தாயை நெருங்கி வந்து அவளை கன்னத்தில் முத்தமிட்டான். அவளும் பதிலுக்கு, அவனை கட்டியணைத்து முத்தமிட்டாள்!

 " அம்மா! எனக்கொரு சந்தேகம்! அந்த குழந்தையைப்போல, பெரியவங்களாலே எப்பவும் ஏன் சிரித்துக்கொண்டு இருக்க முடியலே? அப்பாவுக்கு மாமாமீது கோபம், உனக்கோ இவங்க சண்டையை நினைத்து வருத்தம், அக்காவுக்கோ கல்யாணத்துக்கு போவோமா, மாட்டோமான்னு கவலை, வேலைக்காரிக்கு புருஷன் அடித்து உதைக்கிறானேன்னு புலம்பல்!"

 "தனபாலு! ரொம்ப பெரிய கேள்வியை, நீ இந்த சின்ன வயசிலேயே கேட்டுட்டே! ஆனா உனக்குப் புரிகிறமாதிரி, எனக்கு பதில் சொல்லத் தெரியலைடா!"

 " சரி, விடும்மா! கல்யாணத்துக்கு நேரிலே வந்து அழைக்கலையேன்னு அப்பாவுக்கு மாமாமீது கோபம்! அந்த கோபம் உனக்கு ஏன் வரலே?"

 " என் கூடப்பிறந்தவருடா, உங்க மாமா! எங்கண்ணன்டா! அவருமேலே எனக்கு எப்படிடா கோபம் வரும்? வருத்தம் உண்டு, வீட்டு மாப்பிள்ளையை நேரில் வந்து அழைப்பதுதான் மரியாதை! ஆனா, அதை காரணமா சொல்லி, கல்யாணத்துக்கு போகாமலிருப்பது தப்புன்னு நினைக்கிறேன்.........."

 " அப்பாவும் உன்னைப்போல ஏன் நினைக்காம, ஏன் ஆத்திரப்படறாரு?"

 " உங்கப்பா, மாமா அளவுக்கு பணக்காரனில்லே, அந்த தாழ்வு மனப்பான்மை உங்கப்பாவை உறுத்துது! தான் பெரிய பணக்காரங்கிற திமிரிலே, மாமா அலட்சியப்படுத்தறாருன்னு அப்பாவுக்கு கோபம்! ஆனா, உண்மையான காரணம் அது இல்லே! நாம் இருக்கிற இந்த ஊரிலேதான், மாமாவின் மைத்துனரும் இருக்காரு, அவர்மீது மாமாவுக்கு ஏதோ பழைய சம்பவத்தினாலே, மனஸ்தாபம்! அவரை கல்யாணத்துக்கு நேரில் அழைக்க, மாமாவுக்கு விருப்பமில்லே,........."

 " புரியுது, புரியுது, நம்மை அழைக்க இந்த ஊருக்கு மாமா வந்தால், மைத்துனரையும் நேரில் அழைக்கவேண்டியிருக்குமேன்னு, இந்த ஊருக்கே வரப் பிடிக்கலே, மாமாவுக்கு! சரியா?"

 " ஆமாம்டா!"

 " எங்களைப் போல, பெரியவங்களும் சின்னச் சின்ன விஷயங்களை பெரிசாக்கி, சண்டை போட்டுக்கறது, வேடிக்கையாயிருக்கும்மா......சரி, நான் குளித்துவிட்டு வரேன், சாப்பிடுவோம்!"

 தனபால் அகன்றதும், குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த வேலைக்காரியை, அம்மா அழைத்தாள்.

 " உன் உடம்பு வலிக்கும் காயத்துக்கும் மருந்து தரேன்னு சொன்னேனே, மறந்துட்டியா? இந்தா! இந்த மாத்திரை உடம்பு வலிக்கு, இந்த ஆயிண்ட்மெண்ட் காயங்களுக்கு! குழந்தையை என்னிடம் கொடு, இங்கேயே மாத்திரையை விழுங்கிவிட்டு, காயத்துக்கு மருந்தும் போட்டுக்கொள்!"

 குழந்தையை கொடுத்துவிட்டு, வேலைக்காரி முதலில் அம்மாவின் காலைத் தொட்டு கும்பிட்டாள்.

 " இதெல்லாம் வேண்டாம்...."

 " என்னைப் பெத்த தாய்கூட என்னிடம் இத்தனை பரிவு காட்டுவாளான்னு தெரியலே, அம்மா! உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஒரு குறையும் வராம, கடவுள் பார்த்துப்பாரும்மா!"

 " குறை வெளியிலிருந்து வருவதில்லை, நம்ம மனசிலேதான் இருக்கு! மனசு மாறும்போது, குறையும் மறைந்துவிடும்!"

 வேலைக்காரி வெளியேறியதும், கதவை தாளிட்டுவிட்டு, அம்மா சோபாவில் அமர்ந்து டி.வி.யை இயக்கினாள்.

 ஒவ்வொரு சேனலாக பார்த்துக்கொண்டே வந்தாள். எல்லாவற்றிலும், செய்திகளும், சீரியல்களும், பாட்டும், நகைச்சுவையும் ஒளிபரப்பாகியது!

 மனது, அதில் ஈடுபாடு காட்டாத காரணத்தால், டி.வி.யை நிறுத்திவிட்டு, நினைவுகளை தட்டிவிட்டாள்.

 விஜயாவுக்கு அந்தப் பெயரை சூட்டியது, அவள் தந்தை!

 அதற்கொரு காரணம் உண்டு; விஜயா கருவாக, தாயின் வயிற்றில் வளர்ந்த காலத்திலிருந்துதான், வியாபாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு, அவள் தந்தை கோடீஸ்வரன் ஆனார். 

 அன்றிலிருந்து இன்றுவரை, வியாபாரம் தொய்வில்லாமல், அமோகமாக செழிக்கிறது!

 வியாபாரத்தில் சம்பளத்துக்கு வேலை செய்த நிறைய உதவியாளர்களில், கோபாலனும் ஒருவர்!

 கோபாலன் திறமைசாலி, நேர்மையானவர், முதலாளியிடம் விசுவாசமுள்ளவர்!

 விஜயாவை கோபாலனுக்கு திருமணம் செய்துவைத்து மகிழ்ந்த விஜயாவின் தந்தை, பேரனும் பேத்தியும் பிறந்தபிறகு அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்தபின்தான், கண்களை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.