(Reading time: 11 - 21 minutes)

மூடினார்!

 அவர் மறைவுக்குப் பிறகு, வியாபாரம் பெருகி, வெளியூரிலும் கிளைகள் துவங்கி அதில் ஒன்றை தங்கை விஜயாவுக்காக, அண்ணன் ரத்னம் ஒதுக்கியதிலிருந்து கோபாலன் குடும்பம் சேலத்தில் தனியாக வாழ்ந்து வருகிறது!

 கோபாலனிடம், ரத்னம் சுமுகமாகப் பழகினாலும், துவக்கத்தில் சம்பளத்துக்கு வேலை பார்த்த ஊழியனாக இருந்ததையே நினைத்துக்கொண்டு, கோபாலன், தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, ரத்னத்தின் போக்கிலும் பேச்சிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்!

 அதனால்தான், ரத்னம், தன் மகளின் திருமணத்துக்கு, கோபாலனை நேரில் வந்து அழைக்காத சின்ன விஷயத்தை, பெரிதுபடுத்திப் பார்த்து, தன்னை அவமதித்துவிட்டதாக கருதி கோபத்தில் கொந்தளிக்கிறார்.

 விஜயாவுக்கு அண்ணன் ரத்னத்தின்மீது அளவுகடந்த பாசம்! அண்ணனுக்கும் தங்கையின்மீது நிறைய அன்பு உண்டு.

 "அம்மா! நான் ரெடி! சாப்பிடலாமா?"

 " வாடா தனபாலு! சாப்பிடலாம்!"

 " ஏம்மா! என் பெயர் தனபாலை, தனபாலூன்னு ஒரு ஊகாரம் போட்டு இழுக்கிறே?"

 " அதுவா! குழந்தையை தாய் கொஞ்சறபோது, இப்படித்தான் பெயர் மாறிடும்......"

 " அதை விடு! சின்ன விஷயம்! ஏன் வளர்ந்தவங்க அவசியமில்லாம கோப்ப்பட்டு, வருத்தப்பட்டு, ஆத்திரப்பட்டு சண்டை போட்டுக்கிறாங்க? இப்ப பார்! மாமாவும் நல்லவர், அப்பாவும் நல்லவர்! ரெண்டு பேருக்குமே உன்மீது பிரியம் அதிகம். ஏன் ஒருவரை ஒருவர் புரிஞ்சிக்காம, அமைதியை இழக்கிறாங்க?"

 " தனபாலு! உங்கப்பாவுக்கு என்ன வருத்தம்னா, தன்னை உன் மாமா மதிக்கலே, மரியாதை கொடுக்கலேன்னு கோபம்! இது உண்மையோ இல்லையோ, அவர் அப்படி நம்பறார், நாம் என்ன செய்வது?"

 " எனக்கொரு சந்தேகம்மா! இந்த மதிப்பு, மரியாதை எல்லாம் ஒருவருக்கு பிறர் கொடுத்து வருவதாக இருந்தால், அதை எந்த நிமிஷத்திலும் கொடுத்தவர் திருப்பி எடுத்துக்கொள்ளலாம் இல்லையா? அப்படின்னா, அது நிரந்தரமில்லை, நம்முடையது இல்லை, பிறர் பொருள்! அதுக்கா இத்தனை சண்டை?"

 " தனபாலு! நீ சின்னவனா இருந்தாலும், உங்க தாத்தாவைப்போல, படுசுட்டி! கற்பூர புத்தி! சரியாகச் சொன்னே!"

 " மாமா வீட்டு கல்யாணம்னா, நம்ம குடும்பத்து கல்யாணம்தானே? நம்மை நாமே அழைத்துக்கொள்கிறோமா?"

 " இதுவும் கரெக்ட்! அவங்க அவங்க பார்வையை பொறுத்தது, நீயும் நானும், மாமாவை நம்ம குடும்பத்திலே ஒருவரா நினைக்கிறோம், உங்கப்பாவோ, அவர் வேறே, தான் அவர் வீட்டு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்குரிய மரியாதையை எதிர்பார்க்கிறாரு........."

 " இதை எப்படிம்மா சமாளிக்கப்போறே?"

 " தனபாலு! ஒவ்வொரு நிமிஷமும் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கு, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு, இந்த இடைக்காலத்திலே எத்தனையோ மாறுதல்கள் நிகழலாம், மாமாவே மனசு மாறி இங்கே வந்து அழைக்கலாம், அப்படி அழைக்காவிட்டாலும் பரவாயில்லை, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர், அதுக்கு உறவுக்காரங்க விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு உங்கப்பாவே மனம் மாறி நம்மை அழைத்துப் போகலாம், நாம் எப்பவும் நிகழ்காலத்திலே வாழணும், நிரந்தரமில்லாத எதுக்கும் அடிமையாக இருக்கக்கூடாது, உனக்கு ஒரு கதை சொல்றேன்....."

 " அம்மா! நீ கதை சொல்லி ரொம்ப நாளாச்சும்மா, சொல்லும்மா!"

 " ஒரு ஆற்றங்கரை ஓரமா, ஒரு சாமியார் உட்கார்ந்திருந்தாராம், அப்போ, ஆற்றுத் தண்ணீரிலே, ஒரு தேள் தவித்துக்கொண்டிருந்ததாம், ஐயோ பாவம்னு தேள்மீது பரிதாப்ப்பட்ட சாமியார், ஆற்றிலிருந்து தேளை கையால் எடுத்து கரையில் போட்டாராம், அந்த தேள் சாமியார் கையிலே கொட்டியதாம், சாமியாருக்கு கைவலி விறுவிறுன்னு ஏறுது, தேள் மறுபடியும் ஆற்றுத் தண்ணீரிலே விழுந்துடிச்சாம், சாமியார் மறுபடியும் அதை காப்பாற்றினாராம், தேள் மறுபடியும் அவரை கொட்டியதாம், அப்போ அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், சாமியாரை கேட்டானாம், 'தேள்தான் கொட்டுதுன்னு தெரியுமில்லே, ஏன் திரும்பத் திரும்ப அதை காப்பாத்தறே?'ன்னு கேட்டதற்கு, சாமியார் சொன்னாராம், 'கொட்டுவது தேளின் சுபாவம், ஆற்றுத் தண்ணீரிலே மூழ்கிறவனை காப்பாற்றுவது என் சுபாவம், அவங்க அவங்க சுபாவத்தை மற்றவங்களுக்காக மாற்றிக்கக்கூடாது'ன்னாராம்........"

 " அதைப்போல, மாமா அழைக்கிறாரோ, இல்லையோ, குடும்பத்து நிகழ்ச்சியிலே கலந்துக்கறது நம்ம கடமைங்கறே, கரெக்டா?"

 " கரெக்ட்! அதனுடன், இன்னொரு கோணத்திலியும் பார்க்கணும், அந்தக் காலத்திலே விஞான வசதிகள் இல்லாத்தாலே, நேரிலே போய் அழைச்சாங்க! இப்பத்தான், போன்வசதி வீடியோ வசதி எல்லாம் வந்துடிச்சே, அது போதாதா, நேரிலே வந்துதான் கூப்பிடணுமா?"

" அம்மா! அழைப்பிதழ்னு ஏகப்பட்ட செலவு பண்ணி ஒவ்வொருத்தருக்கும் அனுப்பறாங்களே, அது போதாதா? போதாதுன்னா, அது எதுக்கு? வீண் செலவுதானே!"

 " தனபாலு! இப்படித்தான் பழைய வழக்கங்களையும் விடாமல், புதிய வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் பணத்தை, நேரத்தை வீணாக்கறாங்க, எல்லோரும் சிந்திக்கணும்!"

 " அம்மா! அப்படி சிந்தித்து செயல்பட்டாங்கன்னா, எப்பவும் சிரித்துக்கொண்டே சந்தோஷமா வாழலாம், இல்லையாம்மா?" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.