Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர் - 5.0 out of 5 based on 3 votes
Pin It

சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்

ண் விழிகளை திறக்க முயற்சிக்கும் பிஞ்சு விரலின் தீண்டலின் சுகத்தில் தன்னை மறந்தாள்... கால் பாதங்கள் கொண்டு நெஞ்சில் உதைக்க மனம் பஞ்சாய் பறந்தது அவளுக்கு ... கைவிரல் பிடித்து தன் விரல் கோர்த்து தன் பொக்கை வாய் காட்டி சிரிக்கையில் கிடைத்த மகிழ்ச்சியில் சுற்றத்தை மறந்து உவகை அடைந்தாள்.... நெஞ்சில் சாய்ந்து கொண்டு பாஷையின்றி கண்களால் பேசும் குழந்தையின் கன்னம் தீண்டுகையில் கிடைத்த அமைதியில் உலகை மறந்து தனிஉலகில் சஞ்சரித்தாள்.

 அத்தகைய சுகமான அனுபவங்களை அமைதியாக ரசித்து அனுபவித்து குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த ரஷிதாவிற்கு அலைபேசியில் அழைப்பிற்கான அறிகுறியாக மென்மையான காதல் பாடல் கானம் இசைக்க விழி விரித்து பார்த்தவளின் கைத்தீண்டலில் தொலைவில் விழுந்து தொல்லை மறந்து கண்மூடியது அலைபேசி....

 

 ஓரிரு விநாடிகள் மெளனத்தில் கலைய மணி 10 என்பதை உணர்த்த அழகாய் சினுங்கிய சுவர் கடிகாரம் பெண்ணவளின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் தன் வேலையை பாதியிலேயே நிறுத்தி வீடெங்கும் சுள்ளிகளாய் சிதறியது...

 அறையில் நிலவிய அமானுஷ்ய அமைதியை கிளித்து வெளிப்பட்டது பெண்ணவளின் அழுகை.... தலையை சுவற்றில் மோதிக் கொண்டு பூட்டிய வீட்டுக்குள் கதறியவளின் சத்தம் அவளுக்கே திரும்ப கேட்டதே ஒழிய அவள் குரல் அறிய அருகில் யாருமே இல்லை... இவ்வளவு நேரம் கண்டதும் கனவு என்பதை அறிந்ததும் என் குழந்தை என் குழந்தை அழுது அரற்றி முடித்து தரையில் வீழ்ந்தவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது....

5வருடங்களுக்கு முன்.... இதே நாள்... ஏறக்குறைய இதே மணித்துளிகள்.....

 

 ரஷி..... டைம் ஆச்சு கிளம்பிட்டியா என்று கேட்டவனின் முன்னால் வந்து நின்றவள் "என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்றாள்....

 என்ன முடிவுமா என்று கேட்ட ரஞ்சிதத்திடம், அத்தை நான் இப்போ குழந்தை பெற்றுக் கொள்ள போவதில்லை... இன்னும் 2வருஷம் வேலை செய்து ஓரளவு வசதியான பிறகு தான் குழந்தையை பற்றி யோசிக்க போறேன். அதனால் இன்னைக்கு டாக்டர் கிட்ட போய் கருக்கலைப்பு செய்துகலாம் என்று இருக்கிறேன் என்று சாதாரணமாக கூறியவளின் வார்த்தையை தாங்க முடியாமல் தரையிலே அமர்ந்து விட்டாள் ரஞ்சிதம்....

 ரஷி.... நான் சொல்றத கேளு.... பணம் எப்ப வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அதற்காக கருவாகி இருக்கிற குழந்தையை அழித்து பாவத்தை சம்பாதிக்க வேண்டாம் என்றான் அவளை

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • Idhayappoo eppothu malarumIdhayappoo eppothu malarum
 • Kadal serum mazhaithuligalKadal serum mazhaithuligal
 • Katru kodu kannaaleKatru kodu kannaale
 • Mazhaimegam kalaintha vaanamMazhaimegam kalaintha vaanam
 • Ninaivugalukkum nizhal unduNinaivugalukkum nizhal undu
 • Oruvar manathile oruvaradiOruvar manathile oruvaradi
 • Pandiya Nedunkaviyam - Pagam 1Pandiya Nedunkaviyam - Pagam 1
 • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்hari.k 2019-09-16 12:17
Very very true one sis.... :hatsoff: to ur story..such a lovable story sis...naam tholaitha uravugalin vali enavo midavum vedhanaiyana valithan
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 13:47
Quoting hari.k:
Very very true one sis.... :hatsoff: to ur story..such a lovable story sis...naam tholaitha uravugalin vali enavo midavum vedhanaiyana valithan

Thank you friend
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்madhumathi9 2019-09-16 05:39
:clap: nalla kathai mam (y) arumai pala idangalul idhupol nadappathai kelvipattu irukkiren. :thnkx: 4 this story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:01
Thank you mam... Ithu pola pengal ipavum irukirargal mam..
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Adharv 2019-09-15 15:50
👏👏👏 well expressed ma'am !! Career is important avanga sariyaga plan seithu irukalam...no.point in regretting :sad: if this wat is destined one must try to overcome the tough phase :yes:
most saddening part jeeva ivangalai indha nilamai-il vittu ponadhu than....your ending lines was very.much apt for the both the scenario :hatsoff:

Thank you and keep.rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:26
Ena pana aadarv sir... Solum pothu ketkala kadaisila yarakitaium sola mudiyatha nilaiku poitanga... தவறு செய்தால் தண்டனை நிச்சயம் ....thanks for ur supporting friend
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்AbiMahesh 2019-09-15 15:31
Nice Story Mam! Evlo per kuzhanthai kaga wait panranga, ipdi pannalama? :thnkx: for the story Mam :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:10
கண்டிப்பாக இப்படி பண்ணக்கூடாது... பண்ணினால் எத்தனை வேதனை பட்டாலும் சரி செய்ய முடியாது என்பதை உணர்த்ததான் இதை எழுதினேன்... நன்றி அபிமகேஷ் அவர்களே
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்ரவை. 2019-09-15 11:47
ஜெபமலர்! கதைக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது, ppicture
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:16
Quoting ரவை.:
ஜெபமலர்! கதைக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது, ppicture

Picture chillzee team choice than... Thank u chillzee team
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்sasi 2019-09-15 10:47
தீதும் நன்றும் பிறர்தாரா வாரா என்பது போல் ஆகிவிட்டது. கதையை படிக்க ஆரம்பித்த உடனே எனக்கு கோபம் வந்தது மேலும் படிக்காலாமா வேண்டாமா என்றுகூட யோசித்து சரி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என படித்துப் பார்த்தேன் ஏனோ எனக்கு கோபம் குறையவில்லை இது போல சுயநலவாதிகளை பற்றி கேட்கவோ பார்க்கவோ படிக்கவோ பிடிக்கவில்லை மன்னித்துவிடுங்கள் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் குழந்தையை கொல்வது அதன் தாயாகவே இருந்தாலும் கொலைகாரிதான் பின்னால் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டால்கூட பயன் இல்லை செய்த தவறு மாறாது நான் இப்பெண்ணை மன்னிக்க மாட்டேன் சாரிம்மா சாரி :angry:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:07
உங்க மனநிலை எனக்கு புரிகிறது... இதை எழுதும் போது கிட்டத்தட்ட இந்த மனநிலைல தான் இருந்தேன்.. ஆனால் இப்படி பட்ட பெண்கள் இன்றயவும் இருக்கிறார்கள்... இந்ந நிலை மாறனும், இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ கூடாது என்பதற்காக எழுதினேன்... பிடிக்தவில்லை என்றாலும் படித்ததற்கு நன்றி... இனி எழுதினால் சிறந்ததாக எழுதுகிறேன்
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்ரவை. 2019-09-15 07:28
கிடைத்த உறவுகளை உயிராய் நேசிப்போம், காத்திருக்கும் உறவுகளை வரமாய் சுவாசிப்போம் எனும் கவிச் சொற்களை படித்ததும், wow போட்ட முதல் நபர்தான்! உங்களுடைய தனித்திறமை, சுருக்கமாக ஆனால் அழுத்தமாக கருத்துக்களை தெரிவிப்பது! மனமார்ந்த பாராட்டு! இன்றைய நாள் இனிய நாளாக விடிந்திருக்கிறது!
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:23
குழந்தைகளை கருவில் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம்.. பின்பு அழுது புரண்டாலும் தவறை சரி செய்ய முடியாது என்பதை உணர்த்த எழுதினேன்... பட் சரியா present பண்ணலையோனு தோணுது... இனி சரியா எழுத முயற்சிக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தொலைத்து விட்டேன்... கிடைப்பாயா... - ஜெப மலர்Jebamalar 2019-09-16 12:27
Thank you sir... Thangal parratu magilchi kodukirathu
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top