(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - தேவையில்லாத பயம் - இரா.இராம்கி

ரு காட்டில், ஒரு குரங்குக் கூட்டம் வசித்து வந்தது.

அவை மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அக்காடு மிகவும் செழுமையானது விதவிதமான மரங்கள்,  அவற்றில் விதவிதமான கனிகள் என்று வளமாய் இருந்த வனத்தில் குரங்களின் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை.

அவை பழங்களை பகிர்ந்து உண்ணும்

சேர்ந்து மரக்கிளைகளில் தாவித் தாவி விளையாடும்.

அவ்வாறாக தாவித்தாவி விளையாடும் வேளையில் ஒரு குட்டிக்குரங்கு கீழே விழ இருந்தது. ஆனால் மயிரிழையில் உயிர் தப்பியது. அதன் தாய் குரங்கு ஒரு கையை கெட்டியாக பற்றிட, மற்றொரு கையை முறிந்து விழும் தருவாயிலுள்ள லேசான சிறு கிளையின் நுனியில் பற்றியிருந்தது.

தாய்க்குரங்கு பலமாக பற்றி, குட்டிக்குரங்கை தூக்கி காப்பாற்றியது.

இந்த காட்சிகளையெல்லாம் ஒரு கர்ப்பமான குரங்கு கண்டு கொண்டிருந்தது.

அது நாளை நமது குட்டிக்கும் இதே நிலை வரலாம் அல்லவா என்று நினைத்து பயந்தது.

அந்தக்காட்டில் சனிக்கிழமைகளில்  விளையாட்டுகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடப்பது வழக்கம்.

மேலும்,உலகின்

மற்ற வனங்ளிலுள்ள விலங்குகள் பற்றிய விளக்கப்

படங்களையும் சிங்க ராஜாவிடம் அனுமதிப் பெற்று,  ஒளிபரப்பி வந்தனர்.

இவ்வாறாக,

அனைத்து விலங்குகளும் ஒற்றுமமையாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

அன்று சனிக்கிழமை. விலங்குகள் யாவும் வனத்தின் மைய பகுதிக்கு வந்து,  கேளிக்கை அரங்கில் உற்சாகமாகக் கூடினர்.

கர்ப்பமான குரங்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது.

சிங்க ராஜா, முதலமைச்சர் புலி ,துணை அமைச்சர்கள்- சிறுத்தை, கரடி அனைவரும் விஐபி இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

முதலில் குயில் வந்து கடவுள் வாழ்த்து கூவ, கிளி வரவேற்புரைத் தந்தது.

முதல் நிகழ்ச்சி முயல்களின் குழு நடனம். அனைத்து விலங்குகளும் ஆர்வத்துடன் நடனத்தை கண்டு ரசித்தனர். பலமான கரகோஷங்கள் கிட்டின.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.