(Reading time: 5 - 10 minutes)

தேடும் தீர்வும் தேவையில்லாத ஒன்று, என்றது.

இல்லை,இல்லை நான் வித்தியாசமாக சிந்திப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றது.

உடனே, வயதான குரங்கோ உன் இஷ்டம் என்றது.

நரியாரிடம் சென்று தன் யோசனையை சொன்னது.நரியாரும் இது தேவையில்லாத பயம் என்றது.

இல்லை நான் முடிவு செய்து விட்டேன் என்று சொல்லி சென்றது.  சிறிது நேரம் கழித்து வந்தது. இரு முனைகளிலும் துளையிட்ட ,ஒரு சிறிய துணிப்பையை நரியாரிடம் கொடுத்து அதன் துளைகள்வழி ஒரு கயிற்றை விட்டு, பை, வயிற்றுக்குக் கீழ் தொங்கும் படியாக,முதுகில் கட்ட சொன்னது.

நரியாரும் என்னமோ போ, உன் இஷ்டம் என்று கட்டி விட்டது

தாய்க்குரங்கு நன்றியை நரியாரிடம் தெரிவித்து விட் டு,  தனது குட்டியைப் பைக்குள் போட்டுக் கொண்டது. அதற்கு பூரிப்பு தாங்கவில்லை.

அது மரத்துக்கு மரம் தாவியது. பழங்களை ருசித்தது. தனது குட்டி பைக்குள் உள்ளதா என பார்த்துக் கொண்டது.

அதன் மனதில் யாருக்கும் தோன்றா யோசனை நமக்கு தோன்றியுள்ளது என கொஞ்சம் கர்வமும் வந்து விட்டது.

மறுநாள் வனத்தில்,  தாய்க்குரங்கு ,கொய்யா மரத்திலிருந்து மாமரத்திற்குத் தாவிய பொழுது,  கயிறு அறுந்து, குட்டியுடன் இருந்த பை கிளை நுனியில் மாட்டிக்கொண்டது. குட்டிக்குரங்கு கதறியது. அதனால் பையிலிருந்து வெளியே வரமுடியவில்லை.

உடனடியாக, அதே மரத்தில் வேறு கிளையில் இருந்த வயதான குரங்கு வந்து , பையைப் பலமாகப் பற்றி குட்டியை வெளியே எடுத்து காப்பாற்றியது.

மாமரத்தில் குதித்த அடுத்த விநாடி, ஐயோ என் மகள் என பதறிய தாய்க்குரங்கோ, மேற் சொன்ன காட்சிகளைக் கண்டு கண்ணீர் மல்கியது.

தன்னுடைய தேவையில்லாத பயமும் தேவையில்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமே தனது குட்டியின் உயிரைப் பறிக்க இருந்ததை எண்ணி வருந்தியது.

வயதான குரங்கிடம் நன்றியும் மன்னிப்பும் தெரிவித்தது. மற்றவர்களிடமும்,

நரியாரிடமும் மன்னிப்புக் கேட்டது.

 நம் வாழ்வில் நாம் மூத்தோர் சொல் கேட்டாலே நமக்கு தேவையில்லாத துன்பங்கள் வராது என நரியார் சொல்ல, தாய்க்குரங்கும் நிச்சயமாக நீங்க கூறியது, மிகச்சரி என்றது.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.