(Reading time: 5 - 10 minutes)

இரண்டாவதாக மான்களின் மிமிக்ரீ.

அற்புதம் என்று சிங்க ராஜாவே பாராட்ட அடுத்த நிகழ்ச்சியாக நரி " அயல் நாட்டு வன விலங்குகள் பற்றிய" படமொன்றை ஒளிபரப்பியது.

அன்று ஆஸ்ட்ரேலியா,  நியூசிலாந்து நாடுகளின் விலங்குகள் பற்றிய படத்தை நரி திரையிட்டது.

கங்காரு மற்றும் வல்லாபிகள் பற்றி விரிவாக விவரித்தது அந்த விளக்கப் படம்.

அதனை அனைத்து விலங்குகளும் கண்டு மகிழ்ந்தன. கர்ப்பம் அடைந்துள்ளள குரங்கும் அப்படத்தை உன்னிப்பாக கண்டு ரசித்தது. அதன் மனதில் ஒரு விநோத எண்ணம் தோன்றியது.

என்னதான் குட்டிக்குரங்குகள் தாய்க்குரங்கை பலமாகப் பற்றிக் கொண்டாலும், அவை தவறி விழுந்து விடக்கூடுமோ, என அஞ்சியது.மேலும் தனக்கும், கங்காருகளைப் போல் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருப்பின் பத்திரமாக தனது குட்டிகளை அதில் பாதுகாக்கலாம் என எண்ணியது.

சில மாதங்களில் அது ஒரு அழகிய பெண் குரங்கை ஈன்றது.

அதன் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி. தனது குட்டிக்கு நேரத்திற்குத் தாய்ப்பால் தந்து, கவனமாகப் பார்த்துக் கொண்டது.

குட்டியுடன்,மிகுந்த மகிழ்ச்சியாக தனது பொழுதைக் கழித்தது.

பிறகு ஒரு நாள்,  அது தனக்கு முன்பு தோன்றிய எண்ணத்தை(குரங்குகளுக்கும் வயிற்றில் பை போன்ற அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை) சில வயதான குரங்குகளிடம் சொன்னது.

ஒரு குரங்கு சொன்னது

இருந்தா நல்லாதான் இருக்கும் ஆனா இல்லயே என்றது.

மற்றொரு குரங்கு சொன்னது,  அதற்கு அவசியமில்லை,நம்மை படைத்த இயற்கையோ இறைவனோ, அதை நமக்கு தர வில்லை எனவே அது தேவையில்லை என்றது. மேலும், குரங்குகளாகிய நாம், நமது குட்டிகள் நம்மை இறுக பற்றிட, சுமந்து செல்கிறோம், பல விலங்குகளால் அதன் குட்டிகளை இது போல் கூட சுமக்க இயலாது என்றது.

அதற்குத் தாய்க்குரங்கோ, இயற்கையா இல்லன்னா என்ன,

செயற்கையா செய்துட்டா என்ன என்றது.

வயதான குரங்கோ, உன் மனதில் தோன்றிய பயமே தேவையில்லாத ஒன்று நீ அதற்காகத்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.