(Reading time: 10 - 19 minutes)
Couple

முதுகில் விழும் அடியும்தான் என்னை உன்னிடமிருந்து சற்று விலக்கிவைத்திருந்தது.

 இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, அன்று சரஸ்வதி பூஜை! நம் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு. அம்மா நடுஹாலில் ஏழெட்டு படிகளில் பொம்மைகள் அழகாக அடுக்கியிருப்பாள், அதில் குழந்தைகளுக்கும் பங்கு உண்டு. தெருவிலேயே நம் வீட்டில்தான் பெரிய கொலு. அது மட்டுமல்ல, ஒன்பது நாட்களிலும் தினம் வெவ்வேறு பிரசாதம். ஒருநாள் கடலைச்சுண்டல் என்றால் மறுநாள் பருப்புச் சுண்டல்னு மாறி மாறி வினியோகம் என்பதால் மாலை ஆறு மணியிலிருந்து தெருவிலுள்ள பெண்களும் குழந்தைகளும் இரவு ஒன்பதரை வரையிலும் வந்தவண்ணம் இருப்பார். உனக்கோ ஏற்கெனவே கோபம், உன் நல்ல வேஷ்டிகளையெல்லாம் அம்மா கொலுப்படிகளுக்கு உபயோகப்படுத்தி யிருப்பாள். அத்துடன் இரவு பத்து மணி வரை உன்னால் பத்து மணிக்குத்தான் வீட்டுக்குள் நுழைய முடியும். உனக்கு கோபம் வருவது இயற்கைதானே!

 அந்தக் கோபம் அடங்குமுன்னே, சரஸ்வதி பூஜையன்று மந்திரம் சொல்லி பூஜை செய்து வைக்கவேண்டிய சாஸ்திரிகள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார். அவருக்கு எத்தனையோ வீடுகளில் பூஜை செய்துவைக்க வேண்டிய கட்டாயம்!

 உனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை, உன் வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் சாப்பிடமுடியாமல், பசியோடு வாடுகின்றன!

 சாஸ்திரிகளை உன் ஆசைதீர, திட்டமுடியாமல் ஏதோ சிறிது வசை பாடிவிட்டு, மிச்சமிருந்த கோபத்தை நீறு பூத்த நெருப்பாக மனதிற்குள் வைத்து கொதித்துக் கொண்டிருந்தாய்!

 பூஜை முடிகிற நேரம், தீபாராதனை காட்டவேண்டும். அந்த நேரத்தில், உன் ஆசை குழந்தைகள் அனைவரும் கூடவிருந்து கலந்துகொண்டு அம்பாளின் அருளைப் பெற்று, படிப்பில் நன்கு தேர்ச்சி அடையவேண்டும் என்பது!

 குறிப்பாக, நான் கலந்துகொள்ள வேண்டும்! ஏனெனில், படிப்பில் நான் ரொம்ப சுமார்!

 போதாக் குறைக்கு, என் அண்ணனும் அக்காவும் அதே பள்ளியில் ஒரு ஒரு வகுப்பு கூடப் படித்து, இருவருமே எல்லா பாடங்களிலுமே முதல் மார்க் பெறுவதோடு, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளிலும் முதல் பரிசு பெறுவர்.

 ஒவ்வொரு ஆண்டும், பள்ளி வருடாந்திர விழாவன்று, இரவில், நம் வீட்டில், கோலாகலமாயிருக்கும். எல்லா குழந்தைகளும், நீயும் அம்மாவும் ஹாலில் என் அண்ணனும் அக்காவும் பெற்ற பரிசுகளைப் பார்த்து பூரிப்பதும், பரிசு பெற்ற இருவரை கட்டியணைத்து கொஞ்சுவதையும் பார்க்கவேண்டுமே!

 ஆனால், நான் அங்கிருக்க மாட்டேன், எனக்கு அவமானமாயிருக்கும். போதாக்குறைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.