எத்தனையோ பேரிலே, நீயும் ஒருத்தன்! ஆனால், ட்ரம்பை நீ ஏதாவது செய்யமுடியுமா?
ட்ரம்பை விடு! நீ ஓட்டு போட்டு பதவியில் அமர்ந்திருக்கிற அமைச்சர் தவறு செய்கிறார், உன்னால் ஏதாவது செய்ய முடியுமோ?
முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டியது, பிறரை நல்வழிப்படுத்த நாம் கட்டாயப்படுத்த முடியாது என்கிற யதார்த்தத்தை உணர்ந்துகொள்!
அடுத்தது, அடுத்தவர் பேசுவது தவறு, செய்வது தவறு என கருதுகிற உரிமை உனக்கு உள்ளதுபோல, அவர்களுக்கும் நீ நினைப்பது தவறு என கருத உரிமை உண்டில்லையா? இருவரில் எவர் சொல்வது சரி என்பதை யார் முடிவு செய்வது?
இப்படி நடைமுறை சிக்கல் உள்ளபோது, நீ கோபம் அடைவதில் பயனென்ன?
இந்த உண்மையை ஒப்புக்கொண்டு இனி பிறரின் பேச்சு, செயலைக் கண்டு கொதிப்படையாதே! சிரித்துக்கொண்டே பேசாமலிரு!
ரத்தக் கொதிப்பு வராது! மன அமைதி கெடாது! சரியா?"
"சபேசன்! உன்னை நம்பிவந்தது, வீண் போகவில்லை! நீ சொல்வதுதான் உண்மை!"
" அது மட்டுமல்ல, முக்கியமான ஒரு விஷயம்! யாராவது ஏதாவது பேசினால், செய்தால், உடனடியா அந்த இடத்திலேயே நாம் ரியாக்ட் பண்ணக்கூடாது, எதிராளி செய்கிற தவறை நாமும் செய்யக்கூடாது, நாம் நாமாக இருக்கவேண்டும், எப்போதும்!"
" நிச்சயமா! மிக்க நன்றி, சபேசா! நான் வரேன்!"
நண்பன் நகர்ந்ததும், சபேசன் தொடர்ந்து இயல்பாக தன் வழக்கமான செயல்களில் ஈடுபட்டார்.
" அம்மா! அப்பாவை கவனிச்சியா? நண்பனை தனது அட்வைஸ் மூலமாக சமாதானப் படுத்திய பெருமையோ, கர்வமோ, ஏன் மகிழ்ச்சியோகூட சிறிதும் இல்லாமல், எத்தனை இயல்பாக இருக்கிறார், பார்! நிச்சயமா அப்பா க்ரேட்தான்!"
" பிரபு! நீதான் உங்கப்பாவை மெச்சிக்கணும்! அவர் சொல்வது நடைமுறையில் சாத்தியமான்னு யோசித்துப் பார்! எதிராளி எது பேசினாலும், செய்தாலும் நாம் உடனடியா ரியாக்ட் பண்ணக்கூடாதுங்கறாரே, அது சாத்தியமா? உதாரணமா, உன்னை ஒருவர் காரணமில்லாமலேயோ, அல்லது தவறான காரணத்துக்காகவோ கடுமையாகப் பேசினால், உன்னால் எப்படி ரியாக்ட் பண்ணாமல் இருக்கமுடியும்? ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது!"
பிரபு ஏதும் பேசாமல் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.
" டேய் பிரபு! பதில் சொல்லாமல், போறே?"
பிரபு தாயை தீர்க்கமாகப் பார்த்து சிரித்தவாறே, " அம்மா! நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்...."
" என்னடா சொல்றே?"
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
I always put my best efforts anal lose my temper at times
thank you.