(Reading time: 5 - 10 minutes)

 " வாவ்! அதெப்படி என்னைப் போலவே தாங்களும் 'எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம்' என்ற நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்! நமக்குள்ளே இத்தனை ஒற்றுமையா!"

 " நமக்குள்ளே இத்தனை நெருக்கமா! நிச்சயமாக, இது இறைவனின் திருவிளையாடல்! தங்களுக்கு ஒரு பரிசு அனுப்ப ஆசைப்படுகிறேன், தங்கள் விலாசத்தை தரமுடியுமா?"

 சுகுமாரன் தயக்கமின்றி தன் விலாசத்தை உத்தமிக்கு தெரிவித்தவர், தொடர்ந்து தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் ஒளிவு மறைவின்றி வழங்கினார்.

 உத்தமியும், பதிலுக்கு தனது லண்டன் விலாசம், படிக்கும் கல்லூரி, லண்டனிலுள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண், இந்தியாவிலுள்ள தனது லட்சக்கணக்கான முதலீடுகளின் விவரங்கள் எல்லாம் தெரிவித்துவிட்டு, " தயவுசெய்து இந்த விவரங்களை வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள்! மோசடி அதிகமாயுள்ளது! தங்களை முழுமையாக நம்பி, விவரங்களை தந்திருக்கிறேன்...." என வேண்டுகோள் விடுத்தாள்.

 சுகுமாரன் உத்தமியை முழுவதும் நம்பி, தனது வங்கி சேமிப்பு கணக்கு விவரங்களை தெரிவித்ததோடு, "உத்தமி! உன்னைப்போன்றவளே, என் வாழ்வை பூரணமாக்கி இனிமையாக்கமுடியும், என்னை நம்பினால், தங்கள் புகைப்படத்தை அனுப்பிவைக்கவும். எனது புகைப்படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்"

 " மிக்க நன்றி! புகைப்படத்தில் தாங்கள் தங்கள் வயதைவிட இளமையாக, கம்பீரமாக, கவர்ச்சியாகத் தெரிகிறீர்கள். தங்கள் விசிறியாகிவிட்டேன்! எனது புகைப்படத்தை ஆன்லைனில் அனுப்ப பயமாக உள்ளதால், கூரியரில் தங்கள் விலாசத்துக்கு அனுப்பியிருக்கிறேன்...."

 கூரியரில் கிடைத்த அவள் புகைப்படத்தை பார்த்ததும், சுகுமாரன் அவள் அழகில் மயங்கி, உடனே அவளுக்கும் அதை தெரிவித்தார்.

 " உத்தமி! நீ எனது விசிறி என்றாய்! நானோ உன் அழகில் மயங்கி அடிமையாகிவிட்டேன். உனக்கு சம்மதமானால், நீயே என் வாழ்க்கைத் துணைவி!"

 " எப்போது என்னை தாங்கள் ஒருமையில், நீ, உனக்கு என்று கூறத் துவங்கிவிட்டீர்களோ, அந்தக் கணத்திலேயே நான் தங்கள் வாழ்வில் இணைந்துவிட்டேனே, இனி சம்மதம் தெரிவிக்க உத்தமி என்ற தனிநபர் இல்லையே!"

 " உத்தமி! உனது படிப்பு முடிந்தவுடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே சென்னை வந்துவிடு! நம் வாழ்வை துவக்கிவிடுவோம்!"

 சிறிது இடைவெளிக்குப் பிறகு, உத்தமியிடமிருந்து ஒரு அவசர தகவல் வந்தது!

 " சுகுமாரன்! நான் ஏமாந்து போய்விட்டேன், நான் தங்களுக்கு ஆன்லைனில் தெரிவித்திருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.