(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை -  இன்று ஒரே ஒருநாள்....! - ரவை

யர்ந்து உறங்கிக்கொண்டிருந்த ரித்விகாவை அக்கம்பக்கத்திலிருந்து வந்த பசுவின் 'அம்மா' என்ற ஒலி எழுப்பியது!

 உடல் அசதியாக இருந்ததால், இன்னும் ஒரு பத்து நிமிடம் நிம்மதியாக தூங்கியபின் எழுந்திருக்கலாமே என நினைத்து, போர்வையை உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை போர்த்திக்கொண்டு உடலை சுருக்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ஐம்பது வயதில் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் உபத்திரவம், ரித்விகாவை படுத்தி எடுத்தது!

டிரிங்.....டிரிங்.....

வாசற்புறமிருந்து, காலிங் பெல் ஒலித்தது! மணி காலை ஐந்தரை!

ஆவின்பால் பேக்கட் வந்துவிட்டது!

அவன் பேக்கட்டை போட்டுவிட்டு பெல் அடித்துவிட்டு போய்விடுவான்.

 அந்த பேக்கட்டை உடனே ஓடிப்போய் உள்ளே எடுத்துவராவிடில், தயாராக காத்திருக்கும் திருட்டுப்பூனை பேக்கட்டை தன் பற்களால் குத்திக் குதறி வெளியே கொட்டுகிற பாலை முடிந்தவரையில் உறிஞ்சிவிட்டு ஓடிவிடும்!

 மறுபடியும் பேக்கட் போடும் பையனை அழைத்து பால் வாங்கலாமென நினைத்தால், அவன் அதற்குள் அடுத்த தெருவுக்கே போயிருப்பான்!

 அவனைச் சொல்லி குற்றமில்லை, காலனியிலிருக்கும் எல்லா வீடுகளுக்கும் பேக்கட் போட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்று சீருடையணிந்து காலை சிற்றுண்டியை வாயில் திணித்துக்கொண்டு பள்ளிக்கு எட்டுமணிக்குள் செல்லவேண்டிய நெருக்கடி அவனுக்கு!

 அந்தச் சிறுவனை விட்டால், பால் பேக்கட் போடுகிற குத்தகைக்காரனுக்கு வேறு யாரும் நிரந்தரமாக அந்த குறைந்த ஊதியத்துக்கு தங்குவதில்லை!

 ஒருபுறம், விடியமுன்பே பால்பேக்கட் வந்துவிடுகிற தொந்தரவு! மறுபுறம், பூனையின் தொந்தரவு!

 வேறுவழியின்றி, ரித்விகா விடியற்காலையில், உடல் அசதியால் எழுந்திருக்க கஷ்டப்பட்டாலும், எழுந்தே தீரவேண்டிய கட்டாயம்!

 பால் பேக்கட்டை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, படுக்கையறை நோக்கி நடந்தாள், ரித்விகா!

 உடம்பெல்லாம் வலி! ஒரு பத்து நிமிடம் படுக்காவிடில் உயிரே போய்விடும் போலிருந்தது!

 "அம்மா!"

 அட! மகன் பிருத்வி! அவன் ஏன் இவ்வளவு விடியலில் எழுந்துவிட்டான்?

 " அம்மா! எனக்கு இன்னிக்கி காலையிலே ஏழு மணிக்கு காலேஜிலே இருக்கணும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.