(Reading time: 10 - 19 minutes)

தள்ளப்பட்டுள்ளான்.

 வீடு திரும்பும்போது, உடல் சக்தியெல்லாம் இழந்து துவண்டு தளர்ந்து வருவான்.

 அதனால், அவனுக்கு ரித்விகா வீட்டுவேலை எதுவும் தரமாட்டாள். தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள்!

 வீட்டுவேலை என்று பொதுவாக சொன்னால், உங்களுக்குப் புரியாது!

 கறிகாய், மளிகை வாங்கிவருவது, நால்வரின் துணிமணிகளை துவைத்து இஸ்திரீ போட்டு பீரோவில் அடுக்கிவைத்தல், வீட்டுவேலை செய்யவரும் வேலைக்காரியிடம் வேலைவாங்கி அவளுக்கு சாப்பிடவும் ஏதாவது உணவு தந்தாகவேண்டும்.

 வேலைக்காரி பல வீடுகளில் வேலை செய்வதால், ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரத்தில் வருவாள். அப்படி பல வீடுகளில் உழைத்து சம்பாதித்தும், அவளுக்குப் பற்றாக்குறைதான்!

 அவள் சொல்வதை கேளுங்களேன்:

 "ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒண்ணரைமணி நேரம் வேலை செய்தால்தான், பாத்திரங்களை தேய்த்துவைத்தல், வீடு பெருக்கி துடைத்து சுத்தம் செய்தல், துணி துவைத்தல் முடிக்க முடியும்.

 இவ்வளவு வேலைகளும் செய்தால்தான், மாத சம்பளம் ஐநூறாவது கிடைக்கும். நீங்களே சொல்லுங்கள், இந்த சம்பளத்தில் ஒரே ஒரு வீட்டில் பணி செய்தால், குடும்பத்தை காப்பாற்ற முடியுமா? ஆறு வீடுகளில் வேலை செய்தாலுமே, மொத்தம் மூவாயிரம், நாலாயிரம்தான் கிடைக்கும்.

 என் புருஷன் மூட்டை தூக்கி, வண்டியிழுத்து, பகலெல்லாம் வியர்க்க வியர்க்க உழைத்துவிட்டு இரவில் வீடு திரும்பும்போது, உடல்வலி தீர, கையிலிருக்கும் காசில் குடித்துவிட்டு தள்ளாடி தடுமாறி வந்து விழுவான்.

 எத்தனைநாள்தான் பொறுமையாக இருக்கமுடியும்? புருஷனை ஏதாவது கேட்டால், வாய்ச்சண்டையில் துவங்கி, அடிதடி, மிதியலில் முடியும்.

 நான் வேலை செய்கிற வீடுகளில் சம்பளத்தை உயர்த்தச் சொல்லிக் கேட்டால், அவ்வளவுதான்!

 அவங்க படற கஷ்டத்தையும் ஆபீஸிலே நாள்முழுதும் வேலை செய்தாலும் குறைந்த மாதச் சம்பளம் பெறுவதையும் கதைகதையாக சொல்வார்கள்.

 அவங்களுக்கு ஆபீஸிலே தராங்களே வாரம் இரண்டுநாள் லீவு, வருஷத்துக்கு ஒருமாத லீவு, வருஷாவருஷம் சம்பள உயர்வு, பொங்கலுக்கு போனஸ், மருத்துவ செலவுப் பணம் எல்லாம்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.