(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - சத்தியமேவ ஜெயதே! - ரவை

" ன்லைன்லே, முன்பின் தெரியாதவங்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவே எனக்குப் பயம்!"--உத்தமி

 இதை ஃபேஸ்புக்கிலே படித்தவுடனேயே சுகுமாரனுக்கு அவளைப் பிடித்துவிட்டது!

 " எனக்கும் தான், உத்தமி! பெயருக்கேற்றபடி நீங்க சொல்றது, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு---"சுகுமாரன்!

 " நம்மைப் போன்றவர்களை வெகு எளிதாக ஏமாற்றுகிற கும்பல் பெருகிவிட்டதை நினைக்கவே........" உத்தமி!

 " ஆம், நூற்றுக்கு நூறு உண்மை! அதனால்தான் என் புகைப்படத்தை எந்தச் சூழ்நிலையிலும் நான் முன்பின் தெரியாதவர்களுடன்

பகிர்ந்து கொள்வதில்லை."

 " புகைப்படமா? குடியே முழுகிவிடும்!"

 " உத்தமி! இறைவன் அருளால், இவர்களுக்கு இடையே நாம் அறிமுகமாகியுள்ளோம்! நான் உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நான் கல்லூரி பேராசிரியராக பணியாற்றுகிறேன். வயது முப்பது. வசிக்கும் இடம் சென்னை!"

 " குட் மார்னிங் சார்! தங்கள் நட்பு எனக்கு கிடைத்தது, பெரிய அதிர்ஷ்டம்! நான் லண்டனில் வசிக்கிறேன். சென்னையில்தான் பட்டப் படிப்பை முடித்தேன், மேற்படிப்புக்காக, லண்டனுக்கு வந்திருக்கிறேன். வயது இருபத்தைந்து! என் பெற்றோர் வாழும் ஊர், அறந்தாங்கி!"

 "நமக்குள்ளே எத்தனை ஒற்றுமை, பார்த்தீங்களா! என் சொந்த ஊர், அறந்தாங்கி அருகில் உள்ள நீடாமங்கலம்!"

 " சுகுமாரன்! தங்கள் பிறந்தநாள், திருமணநாள் தெரிவித்தால், வாழ்த்துக்கள் அனுப்பி மகிழ்வேன்......"

 " பிறந்த தேதி 30/9/1989, திருமண தேதியை, திருமணமான பிறகுதானே கூறமுடியும்! தங்கள் பிறந்தநாள், திருமணநாளை அறிய ஆவலாக உள்ளேன், வாழ்த்தி மகிழ!"

 " என் பிறந்ததேதி 31/8/1994, நான் இன்னும் கல்லூரி மாணவிதான்! நிச்சயமாக என் திருமணத்திற்கு, தங்களுக்கு அழைப்பு அனுப்புகிறேன்...."

 " உத்தமி! தங்கள் பெற்றோர் விலாசம் தெரிவித்தால், அவர்களிடம் தங்கள் திருமணத்தைப் பற்றி பேச, வசதியாக இருக்கும்."

 " நல்லவேளை! இதுவரை அவர்கள் விலாசத்தை நான் தங்களுக்கு தெரிவிக்கவில்லை! நேரம் வரும்போது, நானே என் வருங்கால கணவனை தேரந்தெடுப்பேன்! சாதி, மதம், மொழி, இனம், நாடு எந்த பாகுபாடும் பார்க்கமாட்டேன்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.