(Reading time: 9 - 18 minutes)

சிறுகதை - தந்தைக்கு திருமணம்! - ரவை

நிர்மலாவை ஒரு குற்ற உணர்ச்சி சில நாட்களாக பாடாய் படுத்தியது!

 அதிலும், அவள் வாழ்வில் பிரதீபன் கலந்து இருவரும் இன்பத்தின் உச்சக்கட்டத்தை தொடும்போதெல்லாம், கூடவே இந்த குற்ற உணர்ச்சி அவளை குலைத்தது!

 தனக்காக, தன் தந்தை, தன் வாழ்வில், எத்தனை வசந்தங்களை தியாகம் செய்திருக்கிறார் என்பதை மனம் புரட்டியபோது, அவள் நிம்மதியே பறிபோய்விட்டது!

 ஓராண்டு, ஈராண்டா, இருபத்தைந்து ஆண்டுகள்!

 எவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் வாழ்வைத் துவங்கிய அவருடைய நல்ல மனதை, தன்னைப் பெற்றவள் சீரழித்துவிட்டு விலகிவிட்டாள் என்பதை நினைத்து நினைத்து எங்காவது என்றாவது அந்தக் கொடுமைக்கார ராட்சசியை சந்தித்தால், அவளை தன் ஆத்திரம் தீர, அணுஅணுவாக சித்திரவதை செய்யவேண்டும் என்று ஆத்திரத்தில் பல்லைக் கடிப்பாள்!

 அதிலும், தன் தந்தை அவளைப்பற்றி ஒருநாள்கூட கோபமாகவோ, கடுமையாகவோ, அவதூறாகவோ பேசியதில்லை, தன்னிடம் அவளைப் பற்றிய முழு விவரங்களைக்கூட தெரிவித்ததில்லை என்பதை நினைந்து நினைந்து, கண்ணீர் உகுப்பாள், தந்தைக்காக!

 அதே நேரத்தில், அவளை அறியாமலேயே ஒரு வெறியும் உருவாகிக் கொண்டிருந்தது!

 அந்த வெறி என்னவெனில், தனது தந்தைக்கு புதுவாழ்வு அமைத்து தந்தே தீருவது, என்பதே!

 இழந்ததை அவரால் முழுவதும் பெற முடியாவிட்டாலும், அதில் ஒரு பகுதியையாவது அவருக்கு மீட்டுத் தரவேண்டும்!

 அந்த முயற்சியில், தந்தைக்கு ஏற்படுத்தித் தரவேண்டிய வசந்தத்தைப் பற்றி நினைப்பது, ஏற்படுத்தி தருவது, அதன் பின்னரே தங்கள் வாழ்வில் வசந்தம் என்று பிரதீபனின் சம்மதம் பெற்று முடிவு எடுத்தாள்.

 பிரதீபனும், பரந்த மனதுடன், சம்மதம் தந்ததோடு, அவள் வெற்றி பெற ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தான்.

 இத்தனை ஆண்டுகளாக, தனக்காக தன் தந்தை செய்திருக்கிற தியாகங்களை, அனுபவித்திருக்கிற கஷ்டங்களை, சகித்துக்கொண்டிருக்கிற அவதூறுகளை தன் அத்தை சமீபத்தில் தெரிவித்திருக்காவிடில், தனக்கு தெரியாமலே போயிருக்குமே என நினைத்து தன் அத்தைக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தாள், நிர்மலா!

 தன் தந்தை இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு தன் பெற்றோரையும் உற்றாரையும் உடன்பிறந்தோரையும் விரோதித்துக்கொண்டு, தன் தாயை மணந்த ஒரே செயலுக்காக, அவர் இன்னமும் அவர்களிடமிருந்தே பிரிந்தே வாழ்கிற அவலத்தை தன் அத்தையிடமிருந்து தெரிந்து கொண்டிருக்காவிட்டால்.....அப்பப்பா! தானும் தொடர்ந்து அறியாமையால், பருவக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.