(Reading time: 9 - 18 minutes)

ஒருவர்கூட இல்லை, எல்லோரும் அவனிடம் வெறுப்பை கொட்டுகிறார்கள், அவனைப் பெற்றவர்கள் உட்பட!

 அவன் வாழ்வது, தனக்காக அல்ல, உனக்காகவே! உன் ஒருத்திக்காகவே!

 தனக்கு மறுக்கப்படுகிற அத்தனை இனிய அனுபவங்களும், நெருங்கிய உறவுகளும், வாழ்வின் வசந்தங்களும், உனக்கு கட்டாயமாக கிடைக்கவேண்டும் என்பது ஒன்றே, அவன் வாழ்வின் நோக்கம்!

 அவன் உனக்கு, தான் பெற்ற ஒரே மகள், வாரிசு என்பதற்காக தருகிற சலுகைகளை நீ அவனுடைய பலவீனமாக நினைத்து சில நேரங்களில் அவனை தூக்கி எறிந்து பேசுகிறாய்!

 அதை பொறுக்க முடியாமல்தான், இன்று நான் உன்னிடம் சில ரகசியங்களை தெரிவிக்கப் போகிறேன், உன் அப்பாவுக்கு நான் கொடுத்த சத்தியத்தையும் மீறி!

 நிர்மலா! உன் அப்பாவும் நானும் பள்ளியிலும் கல்லூரியிலும் ஒரே வகுப்பில் படித்த நெருங்கிய நண்பர்கள். உறங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் சேர்ந்தே இருப்போம்.

 கல்லூரிப் படிப்புக்காக, ஊரைவிட்டு சென்னையில் வந்து தங்கும்போதுகூட, இருவரும் சேர்ந்தே ஒரு வீட்டில் மாடியில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து தங்கினோம். அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் வசித்தது உன் தாயின் குடும்பம். குடும்பமென்ன குடும்பம்? தாயும் மகளும் மட்டுமே...."

 அங்கிள் அழகேசன் இப்படி ஒவ்வொன்றாக நடந்ததை விவரித்துச் சொல்லச் சொல்ல, நிர்மலாவின் முடிவு இறுகி உறுதியாயிற்று!

 தந்தைக்கு மறுமணம் செய்துவைத்தே தீருவது என சபதம் எடுத்தாள்.

 " உன்னைப் பெத்தவளும் அவள் அம்மாவும் ஒழுக்கக்கேட்டின் முகங்கள்! த்தூ! இப்படி வாழறதைவிட, தூக்குப் போட்டு சாவலாம்! ஆம்பிளைங்களை ஏமாத்தி, பணத்தைப் பிடுங்கிக்கிட்டு, பெத்த குழந்தையை அப்பனிடம் எறிந்துவிட்டு ஊர் மேயப் போயிடற பிசாசுங்க!"

 இந்தச் செய்தி நிர்மலாவுக்கு அவள் அத்தை தந்த பரிசு!

 இதை உறுதிப்படுத்தினார், மேகநாதன்!

 "ஆம், நிர்மலா! உண்மைதான்! எங்களுக்கே நாங்கள் அந்த வீட்டில் குடியேறி வெகுநாட்கள் கடந்தபின்தான், இது தெரியும். அதற்குள், உன் தந்தைக்கும் உன் தாய்க்கும் இடையே உறவு, உறுதியானதற்கு நிரூபணமாக, அவள் வயிற்றில் நீ புகுந்துவிட்டாய்! உடனே அவள் கழுத்தில் உன் தந்தை தாலி கட்டி மனைவியாக ஏற்காவிட்டால், போலீஸில் புகார் செய்வதாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.