சோதித்துவிட்டு கெடு வைத்துவிட்டு போய்விட்டார்!
இதுவரை செய்த செலவுகள் அனைத்துக்குமே பணம் தந்தது, பக்கத்து போர்ஷன் ராமன் தான்!
ஏனெனில், தாரிணி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்!
கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு தைரியம் தந்து, சுயநினைவுக்கு கொண்டுவந்ததும், அவள் எழுப்பிய முதல் கேள்வி: 'எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத என் கணவருக்கு ஏன் இந்த நோய் வந்தது? எந்தவிதமான சூசகமோ, முகாந்திரமோ இல்லாமல், முற்றிப்போன நிலையிலே நோய் தெரிந்தது, ஏன்?' என்பதே!
அதற்குத்தான் டாக்டர் பாப்பையா விளக்கமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
தாரிணி பக்கத்து போர்ஷன் தம்பதிகளை கையெடுத்து கும்பிட்டு கண்களில் நீர் தளும்ப, எதுவும் பேசத் தெரியாமல் நின்றாள்!
" தாரிணி! முதல்லே, கும்பிடற கையை எடு! நாங்க என்ன கடவுளா? ஏதோ சமயத்திலே உனக்கு உதவி செய்ய கடவுள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்த அதிர்ஷ்டசாலிங்க! ஆமாம் தாரிணி! எங்கள் ஆயுள் முழவதும் இதை நினைத்து நினைத்து பெருமைப்படுவோம்!
சரி சரி, இப்ப அதையெல்லாம் பேச நேரமில்லே! ஒரு மணி நேரத்திலே டாக்டருக்கு முடிவு சொல்லணுமே, ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டணுமே, என்ன செய்யப்போறே? உன் சொந்தக்காரங்க யாராவது உதவி செய்வாங்களா? அவங்க போன் நம்பர் சொன்னேன்னா, அவங்களை இங்கே வரவழைக்கிறேன்....."
தாரிணி தன் இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி "அவர்தான் என்னுடைய ஒரே சொந்தக்காரன்! கலந்து பேசவும், பணம் ஏற்பாடு செய்யவும் அவர் ஒருத்தர்தான் இருக்காரு, ஆனா அவர்தான் அதையெல்லாம் செய்ய வராம, என் கணவருக்கு இந்த நோயை, அதுவும் சீரியஸான நிலையிலே, கொடுத்துவிட்டு, சிரிக்கிறாரே......"
" தாரிணி! உன் அதிர்ச்சியிலே, நீ இல்லே, உன் நிலையிலே யாராக இருந்தாலும், இப்படித்தான் பேசுவாங்க! ஆனா, ஒரு விஷயத்தை யோசித்துப் பார்! நடுராத்திரியிலே உன் கணவர் நெஞ்சுவலியிலே துடிச்சு நீ அதைப் பார்த்து சத்தம் போட்டபோது, நல்லா தூங்கிக்கொண்டிருந்த எங்களை எழுப்பி உன் உதவிக்கு அனுப்பினது, யாரு? அவர்தானே! கெட்டதுக்கு மட்டும் அவரை குறை சொல்லிட்டு, நல்லதை மறப்பது, நன்றி கெட்ட செயல்! பொதுவா, எல்லாரும் இந்த தப்பை செய்கிறோம்!
சரி, அதை விடு! சர்ஜரி செய்யணுமா, வேண்டாமான்னு முடிவு எடுக்கணுமே, என்ன சொல்றே? டாக்டர் உன்னிடம் பளிச்சுனு சொல்லிட்டாரு, சர்ஜரி செய்தால் பிழைக்க ஐம்பது சதவிகிதம் சான்ஸ் இருக்கு, செய்யலேன்னா, எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்னு சொல்லிட்டாரே, என்ன