(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - தெய்வம் தொழாள்! - ரவை

காந்தி உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில், தமிழ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார், ஆசிரியர் தமிழரசன்!

 அவர் மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டே, பாடம் சொல்லித் தருவார். அதிலுள்ள பயன் என்னவெனில், மாணவர்கள் தூங்கி வழியமாட்டார்கள், சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு விளக்கம் பெறுவார்கள், தமிழ் மொழியின்மீது பற்று ஏற்படும், பரீட்சைக்காக மட்டும் படிக்காமல், இலக்கிய தாகத்துடனும் மொழிப்பற்றுடனும் மாணவர்கள் பயில்வார்கள்.

 அதனால், தமிழ் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும்!

 அன்றைய பாடம்,

'திருக்குறளின் சிறப்பு!'!

 தமிழரசன் துவக்கத்திலேயே மாணவர்களின் ஈடுபாட்டை தூண்டிவிட நினைத்தார்.

 " இன்றைய வகுப்பை நடத்தப் போவது, நானல்ல, நீங்கள்!

 ஆறாம் வகுப்பு தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, திருக்குறள் படித்து வருகிறீர்கள்.

 உங்களில் யாரேனும் ஒருவர் எழுந்து, மேடைக்கு வந்து, உங்களுக்குப் பிடித்தமான ஒரு குறளை சொல்லி, அதன் சிறப்பை விளக்கி வகுப்பை தொடங்கி வையுங்கள்!"

 நாலைந்து பேர் எழுந்து நிற்கவே, ஆசிரியர் சிரித்துக்கொண்டே, ஐவரையும் பார்த்தார்!

 கணேசன், வரதராசன், ராமசாமி, சீனுவாசன், ஶ்ரீமதி!

 " தாய்க்குலத்துக்கு முன்னுரிமை தருவது, தமிழ் மரபு! அதனால், முதலில் ஶ்ரீமதி சொல்லட்டும்!"

 ஶ்ரீமதி துவங்குமுன்னே, ஆசிரியர் குறுக்கிட்டு " ஒவ்வொருவரும் தங்கள் விளக்கத்தை சுருக்கமாக ஐந்து நிமிடங்களில் சொல்லி முடித்தால், அதிகம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். இரண்டாவது, ஒருவர் பேசும்போது, மற்றவர்கள் குறுக்கிடக் கூடாது. அவரவர் பேசும்போது, அவருக்கு முன் சொல்லப்பட்ட கருத்தை விமரிசிக்கலாம், பண்பாடு குறையாமல்! ஶ்ரீமதி சொல்லும்மா!"

 "தமிழ் இலக்கியத்திலேயே திருக்குறள் ஒன்றுதான் உலகமொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது! உலக மக்கள் அனைவராலும் ஏற்று பாராட்டுப் பெற்ற நூல், திருக்குறள்!

 நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களில், உலக வாழ்வுக்கு தேவையான எல்லா கருத்துக்களையும் திருக்குறள் அடக்கியுள்ளது.

 திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருப்பதைவிட, என்னால் ஏற்கமுடியாத ஒரு குறளை சொல்லி அதைப்பற்றி மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை கூறவேண்டுமென

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.