(Reading time: 9 - 17 minutes)

 ஆனால், அந்தக் குறள் அடங்கிய அதிகாரத்தில் உள்ள பத்து குறளையும் படித்தால்தான், திருவள்ளுவர் பெண்களை சிறுமைப்படுத்துகிறாரா, பெருமைப்படுத்துகிறாரா என்பது தெளிவாகும்.

 அந்த அதிகாரம் முழுவதுமே பெண்ணின் பெருமையையும், வலிமையையும், அவளால் கணவனும் குழந்தைகளும், மொத்தக் குடும்பமே பெறுகிற புகழையும் வலியுறுத்துகிறது.

 அது தெரிந்துதான், 'ஆணும் பெண்ணும் நிகர்' என சொன்ன அதே மகாகவி பாரதி 'வள்ளுவன்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனவும் பாடியுள்ளான்.

 இப்போது, அந்த அதிகாரத்தில் உள்ள மற்றொரு குறளை நினைவு கூறுவோம்!

'மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் மக்கட்பேறு!'

அதாவது குடும்பத்துக்கு நற்பெயரை பெற்றுத் தருவது, கணவன் அல்ல, மனைவியும் அவள் பெற்றுத் தருகிற மக்களுமே என்கிறார்."

 இந்த இடத்தில் மாணவர்கள் கைதட்டி பாராட்டவே, பேச்சு தடைப்பட்டது.

 " இன்னொரு குறளை பார்ப்போம்!

 'புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் பீடுநடை!" அதாவது, புகழை ஈட்டித்தரும் மனையாள் இல்லாதவர், சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாது என்கிறார், திருவள்ளுவர்.

 அதிகாரம் முழுவதுமே கற்பின் பெருமையை பறைசாற்றவே எழுதப்பட்டுள்ளது. கற்புடைய பெண்டிருக்கு தெய்வத்தின் துணை தானாகவே ஓடிவரும், பெண்கள் தெய்வத்தை நாடிச் செல்லவேண்டியதில்லை என வலியுறுத்தவே 'தெய்வம் தொழாள்' என்கிறார்.

 ஶ்ரீமதி கூறியது முற்றிலும் தவறு என நான் கூறவில்லை. அவள் பார்க்கும் பார்வைக்கு அவர் கருத்து சரியானதே! ஆங்கிலத்தில் 'பெர்சப்ஷன்' என்பார்கள், இதை!

 நான் அவளை கேட்டுக் கொள்வதெல்லாம், அந்த ஒரு குறளை வைத்து மட்டும் திருவள்ளுவருக்கு சாயம் பூசாதே, மொத்த அதிகாரத்தையும் சேர்த்துப் பார்! என்பதே!

 ஒரு கருத்தில் எனக்கும் ஶ்ரீமதிக்கும் உடன்பாடு உண்டு. சமுதாயத்தில் ஆணாதிக்கம் மேலோங்கி, பெண்களை ஆண்கள் சிறுமைப்படுத்தி வருவது, நெடுங்காலமாக நடந்துவருகிற கொடுமை!

 ஆனால், அதற்கு திருவள்ளுவர் பொறுப்பல்ல என்பதே என் தாழ்மையான கருத்து!"

 வகுப்பு, மறுபடியும், எழுந்து நின்று கைதட்டி, பாராட்டியது!

 பிரபாவதி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும், ஆசிரியர் தன் கைக்கடிகாரத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.