உத்தரவு கொடுத்துட்டார். அவர் ஏழை பங்காளன். இனிமேல் சபாபதி உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
இதிலே இன்னொரு சங்கடம் என்னன்னா, ஆபரேஷன் டேபிளிலேயே, சபாபதி உயிர் பிரிந்துவிட்டால், ஒரு கும்பலே ஆஸ்பத்திரிக்கு வந்து, நான்தான் சரியா சர்ஜரி செய்யாமல், சபாபதியை கொன்னுட்டேன்னு கொடி பிடிக்கும், கல் எறியும், காசு பறிக்கிற கும்பல்!
இதுக்கு பயந்துதான், ஏசுநாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் 'செய்!' னு சொல்லிட்டார், சபாபதி அதிருஷ்டக்காரன்!
அதுசரி, லட்ச ரூபாய் பணத்தை கட்டியாச்சா?ரசீது காட்டினால்தான், சர்ஜரிக்கு அனுமதி கிடைக்கும்......."
" டாக்டர்! அது விஷயமாகத்தான், உங்களிடம் வந்திருக்கேன்..."
" நான் என்ன செய்யமுடியும்? ஆஸ்பத்திரி ரூல்ஸ்களை மீறி நான் எதுவும் செய்யமுடியாது....."
" நாங்க ஏழைங்க. மத்தியதர வர்க்கத்திலேயே அடிமட்டம்! ஏதோ மானத்தோட, பிச்சை எடுக்காமல் வாழறோம்....திடீர்னு ஒரு லட்ச ரூபாய்க்கு நாங்க எங்கே போவோம்? ப்ளீஸ்...."
" உங்க நிலமை எனக்கு புரியுது. உங்களுக்காக, என் ஃபீஸ் ஐம்பதாயிரம் ரூபாயை அப்புறம் வாங்கிக்கிறேன், மீதி ஐம்பதாயிரத்தை நீங்க வேற யாரிடமாவது கடன் வாங்கி ஆஸ்பத்திரியிலே கட்டி ரசீது வாங்கிடுங்க, போங்க!"
" அவ்வளவு பணம் புரட்ட டைம் ஆகும், அதுவரையிலும் சர்ஜரியை தள்ளிப்போட முடியுமா?"
" அது என் கையிலே இல்லை, சபாபதிக்கு கடவுள் எழுதியிருக்கிற விதியை பொறுத்தது......"
" எவ்வளவு சீக்கிரம் பணத்தை புரட்ட முடியுமோ, புரட்டிண்டு ஓடிவந்துடறேன், அதுக்காக, சர்ஜரியை டிலே பண்ணாம, ஆரம்பிச்சிடுங்க! நாலைந்து மணி நேரத்திலே நான் பணத்துடன் திரும்பி வந்துடறேன், ப்ளீஸ்......"
" எனக்கு அந்தமாதிரி செய்ய அதிகாரம் கிடையாது,......ஒண்ணு செய்வோம், நான் உங்களை நம்பி அந்தப் பணத்தை தரேன், அதைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரிக்கு கட்டிடுங்க! ரசீது என்னிடம் கொடுத்துவிட்டு நீங்க ஆறு மணி நேரத்திலே பணத்தை புரட்டிண்டு வாங்க, சரியா? இதை நான் செய்யறேன்னா, ஏசுநாதர் எனக்கு உத்தரவு கொடுத்தபிறகு நான் எந்தக் காரணத்துக்காகவும் சர்ஜரி செய்யாமல், சபாபதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடாது, இந்தாங்க பணம்!"
டாக்டர் தன் உள் அறைக்குச் சென்று கத்தையாக பணத்தை எடுத்துவந்து ராமனிடம் கொடுத்தார்!
ராமன் டாக்டர் பாப்பையாவின் காலில் விழுந்தார். கண்களில் நீர் கொட்டியது!