" ஐயா! இப்பல்லாம், பேங்கிலே, மியூசுவல் ஃபண்ட் ஆபீஸ்களிலே, உயில் எழுதறதுபற்றி விளக்கமா நோட்டீஸ் அடிச்சு எல்லாருக்கும் தராங்க, நான் எழுதியிருக்கிற இந்த உயிலை நீங்க பதிவு செய்துகொடுத்தா போதும்."
" அப்படியா? சரி, அதோ இருக்காரே, முனுசாமி! அவரிடம் உயிலை காட்டுங்க, சரிபார்த்து கொடுப்பார்......."
முனுசாமியிடம் சென்றேன். அவர் தலையை குனிந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்!
"ஐயா! வணக்கம்!"
முனுசாமி தலைநிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு, மறுபடியும் தலை குனிந்துகொண்டார்.
சிறிதுநேரம் பொறுமையாக காத்திருந்தேன். பிறகு, முனுசாமியிடம் சொன்னேன்.
" இந்த உயிலை, உங்களை சரிபார்க்கும்படி, பதிவாளர் உங்களிடம் காட்டச் சொன்னார்......."
" அவர் சொன்னது, என் காதிலும் விழுந்தது. இப்ப நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், அவசரம்னா ஒண்ணு செய்யுங்க!
வாசல்லே நிக்கிறவர்கிட்ட, கேளுங்க! அவர் சொல்றபடி செய்யுங்க, போங்க!"
" ஏன்யா! பதிவாளர் உன்னை பார்க்கச் சொன்னா, நீ வேற ஆளை கைகாட்டறே?"
"அது அப்படித்தான்! உனக்காக இங்க யாரும் பழக்கத்தை மாத்திக்க முடியாது!"
பதிவாளரும் மற்றவர்களும் உரக்கச் சிரித்தனர்.
நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துவிட்டு, வெளியே வந்தேன்.
" என்ன பெரிசு! நான் சொன்னா, உனக்கு புரியாது, இப்ப புரிஞ்சிடிச்சா, வா! நான் உனக்கு எல்லாம் நல்லபடியா செய்துதரேன், முதல்லே, அதோ நிக்கறாரே, புரோக்கர் பாலு, அவரைப் பாருங்க, போங்க!"
என்னைச் சுற்றியிருந்த பொதுமக்களில் ஒருவர், வாய்விட்டு சிரித்துவிட்டு,
"சார்! இந்த இடத்துக்கு புதுசா?" என்று கேட்டுவிட்டு என்னை புரோக்கர் பாலுவிடம் அழைத்துச் சென்றார்.
"வாங்க, பெரியவரே! இப்பத்தான் முனுசாமி போனிலே சொன்னாரு, நீங்க வருவீங்க, உடனடியா உங்களுக்கு வேணுங்கறதை செய்து கொடுக்கச் சொன்னாரு......."
" அப்படியா, ரொம்ப சந்தோஷம்! எனக்கு பெரிசா ஒண்ணும் தேவையில்லேப்பா! நான் கொண்டு வந்திருக்கிற உயிலை பதிவு பண்ணித்தரணும், அவ்வளவுதான்!"
" உயில்லே எழுதிவைக்கிற சொத்துக்களின் மதிப்பென்ன? பத்து லட்சம் இருக்குமா? அதுக்கும் மேலேயா?"