(Reading time: 8 - 16 minutes)

 தற்போது, அரசாங்கம் மாதாமாதம் தருகிற ஓய்வூதியத்தில்தான் குடும்பம் நடத்துகிறேன்.

 ஏகநாதனும் பரமேஸ்வரியும் குடும்பத்துக்காக சேர்த்து வைத்திருக்கிற சொத்து, புத்திரன்களின் நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம், தலைநிமிர்ந்து நடக்கும் குடும்ப கௌரவம் மட்டுமே!

 அவருடன் ஊழியம் செய்த மற்றவர்கள் அனைவரும் கைநிறைய, இல்லை பைநிறைய, அதுவும் இல்லை, வீடு நிறைய, கையூட்டு வாங்கி சேர்த்திருந்தாலும், என்றைய தினம் தங்கள்மீது சட்டம் பாயுமோ எனும் பீதியில் பயந்து நடுங்கி தலை கவிழ்ந்து நடக்கும்போது, ஏகநாதன் குடும்பம் மட்டுமே தலை நிமிர்ந்து நடக்கிறது எனும் கௌரவமே அவருடைய சொத்துக்களில் முதன்மையும் முக்கியமானதுமாகும்!

 ஆகவே, ஏகநாதன்- பரமேஸ்வரி தம்பதிகள் தங்கள் இரு புத்திரன்களுக்கு விட்டுச் செல்வது, கீழ்வரும் யோசனைகள் மட்டுமே!

  1. என்றும் நீங்கள் நீங்களாகவே இருக்க முயலுங்கள்! அக்கம்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, பகட்டாக வாழ ஆசைப்பட்டு, உங்கள் நிம்மதியை இழக்காதீர்கள்!
  2. வாழ்வில் எப்போதும் கடந்தவைகளை நினைத்து வருந்துவதோ, எதிர்காலத்தில் வரப்போவதைப்பற்றி கனவுகண்டோ, மனதை விஷமாக்கிக் கொள்ளாதீர்கள். என்றும் நிகழ்காலத்தில் வாழ முயற்சியுங்கள்.
  3. உலகம் நம்புகின்ற, பரப்புகின்ற, பழமையான, நல்லது-கெட்டது பாகுபாட்டில் சிக்கி சீரழியாதீர்கள். நல்லது-கெட்டது என, நிரந்தரமாக எதுவும் இல்லை. ஒருகாலத்தில் கெட்டதாக உள்ளவைகளே பிறகு நல்லவைகளாக ஏற்கப்படும். அதேபோலவே, நல்லதும் கெட்டதாக மாறித் தெரியும்.

அது மட்டுமல்ல, அவரவருடைய பார்வையின் அடிப்படையில், நிகழ்வுகளும், பொருட்களும், நல்லது-கெட்டதாக பகுத்தறியப்படுகிறது என்பதனால், அதில் சிக்கிக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள்! பிறரை நீங்கள் விமரிசிக்காதீர்கள்! அதேபோல, பிறர் உங்களை விமரிசிப்பதையும் ஏற்காதீர்கள்.

  1. ஈரேழு உலகம், அவைகளில் வாழும் ஜீவராசிகள், காற்று, ஆகாசம், நீர், எல்லாவற்றையும் படைத்து, காத்து, மாற்றுபவனின் எண்ணப்படியே எல்லாமே இயங்குகின்றன. எல்லோருமே அவனுடைய படைப்புகளாதலால், பாகுபாடின்றி, யாவருக்குமே நல்லதே செய்வான் என நம்புங்கள். எதற்கும் அச்சமோ, கவலையோ, பாதிப்போ அடையாதீர்கள்! நிகழ்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  2. முக்கியமாக, நடக்கிற எதையுமே படைக்கப்பட்ட ஜீவராசிகளால் புரிந்துகொள்ள முடியாது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.