(Reading time: 9 - 17 minutes)

எதுவுமே இன்றி திடீரென ஏற்படும் தீவிர இருதய பாதிப்பு என பலது உண்டு.

 அறிகுறி, திடீரென மூச்சுத் திணறல், உடலில் வியர்த்துக் கொட்டுதல், மூச்சுத் திணறல், இடதுகை மணிக்கட்டில் வலி, இடது தோள்பட்டை, கைகளில் வலி இப்படி சில!

 உன் கணவர் விஷயத்தில் உனக்குள்ள சந்தேகம் எங்களுக்கும் வந்தது. ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்தோம். அதிலிருந்து, தெரியவந்தது, அவருடைய ரத்தக் குழாயில் ஆறு இடங்களில் தடுப்பு, 'ப்ளாக்' இருக்கு!

 பொதுவாக நாலைந்து தடுப்புகள் இருந்தால், அறுவை சிகிச்சை செய்து, பைபாஸ் ஏற்படுத்தி, ரத்தம் தடையின்றி உடலில் செல்ல வழி செய்வோம். உன் கணவருக்கோ ஆறு இடங்களில் தடை உள்ளது.

 இந்த வயதில், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவருக்கு இவ்வளவு தடைகள் இருப்பது ஆச்சரியம்தான்!

 ஆனால், ஆஞ்சியோ வரைபடம் தவறாக இருக்கமுடியாது, லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து வெளிநாட்டிலிருந்து தருவித்துள்ள உயர்ந்தரக மிஷின்!

 வேறுவழியில்லை, அறுவை சிகிச்சை உடனே செய்தால், அவர் உயிர் வாழ சந்தர்ப்பம் கிடைக்கலாம். ஆனால், ஆறு இடங்களில் தடை என்பதால், அறுவை சிகிச்சை முடிக்க கொஞ்சம் அதிக நேரமாகும். அவ்வளவு நேரத்துக்கு, நோயாளி அனஸ்தீஷியா மயக்க மருந்தை தாங்கமுடியுமா என்பது பெரிய ரிஸ்க்!

 அதிர்ஷ்டம் இருந்தால், பிழைத்து மேலும் அறுபது ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம்.

 அதிர்ஷ்டம் இல்லையென்றால், அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும்

போதே, உயிர் பிரியலாம்.

 அதனால்தான் உன்னிடம் விளக்கமாக சொல்கிறோம். நீ சம்மதித்தால் அறுவை செய்வோம். இல்லை என்றால், நோயாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்.

 உன் கணவர்விஷயத்தில், ஒருநாள் டயம் தருகிறோம். உறவினர்கள், நண்பர்களுடன் கலந்தாலோசித்து சொல்!"

 டாக்டர் மூர்த்தியின் அறையிலிருந்து, பூர்ணிமா வெளியேறியதும், அவளுக்கு பீதி போய்விட்டதோ, இல்லையோ, டாக்டர் மூர்த்தியை பீதி தொற்றிக்கொண்டது!

 அவர் எத்தனையோ நோயாளிகளுக்கு விதவிதமான நோய்களுக்கு சிகிச்சை செய்திருக்கிறார். அவற்றில், பெரும்பாலும், குணமடைந்து அவரை வாழ்த்திவிட்டு சென்றவர்கள். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களும் உண்டு.

 இந்த தொழிலில் இதெல்லாம் சகஜம்னு மனதை தேற்றிக் கொள்வார். ஏனோ இந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.