(Reading time: 9 - 17 minutes)

பார்த்தார்.

 டில்லி விலாசம், கரோல்பாக், நாராயணன்!

 அந்த விலாசத்தில் தனக்கு எவரும் தெரிந்தவரில்லையே என டாக்டர் மூர்த்தி தயங்கியபோது, வாசலில் நிழல் தட்டியது!

 கூரியர் கொடுத்தவனுடன், இன்னொருவர்!

 " சார்! மன்னிச்சிக்குங்க! நீங்க வைத்திருக்கிற கூரியர் பார்சல், இவருக்கு வந்திருப்பது! உங்க பெயரும் அவர் பெயரும் ஒன்றாக இருப்பதோடு விலாசமும் ஒரே கட்டிடத்தில் இருப்பதால், குழப்பத்தில் இங்கு தந்துவிட்டேன்......."

 " ஆமாம், டாக்டர் சார்! நீங்க மருத்துவ டாக்டர் மூர்த்தி! நான் பேராசிரியர் டாக்டர் மூர்த்தி! நானும் இதே கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் வசிக்கிறேன். என் மகன் நாராயணன் டில்லியிலிருந்து எனக்கு பிறந்தநாள் கிஃப்ட் அனுப்பியிருக்கான்......"

 டாக்டர் மூர்த்தி மறுகணமே பார்சலை பிரிக்காமல் பேராசிரியரிடம் கொடுத்தார்.

 கூரியர் கொண்டுவந்த பையன் நிம்மதியாகச் சென்றதும், இரு மூர்த்திகளும் பேசிக்கொண்டனர்.

 " உங்க இனிஷியல் டாக்டர்?"

 " ஆர்.மூர்த்தி! ராம்மூர்த்தி, உங்களுடையது?"

 " கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி!"

 " நம்மூரிலே சில பொதுவான பெயர்களில் பலரும் இருப்பதால், இப்படி குழப்பம் நேருவது, சகஜம்! உதாரணமா, தெருவுக்கு பத்து சுப்பிரமணியன்கள், பத்து ராமசாமிகள்........"

 அதைக் கேட்டதும், சர்ஜன் டாக்டர் மூர்த்தி, தனது கைபேசியில் ஆஸ்பத்திரியில் எவருடனோ அவசரமாகப் பேசினார்.

 " மன்னிச்சுக்குங்க, பேராசிரியர் மூர்த்தி! அவசரமா ஆஸ்பத்திரி போகவேண்டியிருக்கு, பிறகு பேசுவோம்......."

 ஆஸ்பத்திரி வந்தவுடனே, கோப்புகள் காப்பாளரை அழைத்தார்.

 " ஆர்.சுப்பிரமணியன் என்கிற பெயரில் உள்ள இருதய நோயாளிகளின் கோப்புகளுடன் உடனே வா!"

 அவரும் ஓடிவந்தார், இரண்டு கோப்புகளுடன்!

 ஒன்று பூர்ணிமாவின் கணவன்! இன்னொன்று அதே பெயர், அதே மயிலை விலாசம், ஒருவர் தந்தையின் பெயர் ராஜகோபாலன், இன்னொருவரின் தந்தை பெயர் ராமசாமி, ஒருவருக்கு வயது முப்பது, இன்னொருவருக்கு வயது எண்பது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.