(Reading time: 9 - 17 minutes)

ஆர்.சுப்பிரமணியனின் விஷயத்தில் மட்டும் அவரால் தன்னை தேற்றிக் கொள்ளமுடியவில்லை!

 ஆர்.சுப்பிரமணியனுக்கும் அவருக்கும், தனிப்பட்ட முறையில், ஒட்டோ, உறவோ எதுவுமில்லை; முன்பின் அறிமுகம்கூட இருந்ததில்லை.

 அதைப் போலவே, பூர்ணிமாவிடமும் எந்தப் பரிச்சயமும் கிடையாது!

 இதிலே, குறிப்பாக சொல்லவேண்டியது, இன்றுதான், முதன்முறையாக நோயாளியை நேரில் பார்த்ததும், நோயாளியின் குறிப்புகள் அடங்கிய கோப்பை படித்ததும்!

 அந்த பெரிய தனியார் மருத்துவ மனையில், இருதய சிகிச்சை பிரிவில், ஒவ்வொரு நாளும் பத்து, இருபது நோயாளிகள் புதிதாக சேருவர்.

 ஒவ்வொருவருடைய பெயர், தந்தையின் பெயர், வயது, வீட்டு விலாசம், தொழில் எல்லா விவரங்களும் கொண்ட தனித்தனி ஃபைல், கோப்பு தயாரிப்பார்கள்.

 அதில், எல்லா டெஸ்ட் ரிபோர்ட்டுகள், ஈ.சி.ஜி., ஆஞ்சியோ ரிபோர்ட், இரத்தப் பரிசோதனை, கொலஸ்டரால் டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வைத்திருப்பார்கள்.

 அறுவை சிகிச்சை செய்கிற சர்ஜன், அந்த கோப்பை படித்தபிறகுதான் முடிவு செய்வார்.

 ஆர்.சுப்பிரமணியன் விஷயத்திலும் அவன் கோப்பை ஆராய்ந்தபிறகுதான், டாக்டர் மூர்த்தி முடிவெடுத்து பூர்ணிமாவிடம் விளக்கினார்.

 இருந்தாலும், டாக்டர் மூர்த்தியின் மூளையில் ஒரு உறுத்தல்! ஏதாவது தவறு நேர்ந்திருக்குமோ?

 ஏனெனில், பூர்ணிமா அவரிடம் திரும்பத் திரும்பச் சொன்னது,

 " என் கணவரைப்போல ஒரு கட்டுப்பாடான, டிசிப்ளினான

ஒருவரை பார்க்கவே முடியாது! ஒருக்காலும் அவருக்கு ஆறு ப்ளாக்குகள் இருக்க சான்ஸேயில்லை."

 அவளை சமாதானப்படுத்த டாக்டர் சொன்ன பதில்தான்:

 எங்கள் ஆஸ்பத்திரி ஆஞ்சியோ மிஷின்கள் வெளிநாட்டிலிருந்து பல லட்ச ரூபாயக்கு வாங்கப்பட்டவை. அவை தவறாக இருக்க சான்ஸே இல்லை!"

 பூர்ணிமாவின் கேள்விக்கு பதில் அளித்துவிட்டாலும், டாக்டர் மூர்த்திக்கும் அதே சந்தேகம் உறுத்தி நெருடியது.

 சிந்தனையுடன் வீட்டில் நுழைந்தவரிடம், அவர் மனைவி ஒரு பார்சலை கொடுத்தாள்.

 " இன்று கூரியரில்வந்தது......"

 டாக்டர் மூர்த்தி பார்சலை வாங்கி மேற்புறத்தில் எழுதியிருந்த அனுப்புனரின் விலாசத்தைப்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.