டாக்டர் மூர்த்தி உற்சாகமாக இரண்டு கோப்புகளிலும் உள்ள ஆஞ்சியோகிராம் ரிபோர்ட்டுகளையும் பார்த்தார்.
பூர்ணிமாவின் கணவன் கோப்பில் இருந்ததில் ஆறு தடைகள் இருந்தன, இன்னொருவருடையதில் ஒன்றே ஒன்று!
டாக்டர் மூர்த்தியின் முகம் தொங்கிப்போனது! அவர் எதிர்பார்த்தபடி, தவறு ஏதும் தெரியவில்லை!
வேறென்ன தவறு இருக்க வாய்ப்பு உள்ளது என யோசித்தவாறே, எதிரிலே சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்தை பார்த்தார்.
முருகன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்ததுபோல தெரிந்தது.
எழுந்து முருகனின் படத்தின்முன் நின்று கையெடுத்து கும்பிட்டார்!
முருகன் தொடர்ந்து புன்னகை புரிந்தான்.
இறுதியாக டாக்டர் மூர்த்தி ஆஞ்சியோ கோப்புகளை மறுபடியும் உன்னிப்பாக கவனித்தார்!
வாய் அவரை அறியாமல், 'முருகா' 'முருகா' என ஜபித்தது!
முருகன் ஜபத்தைக் கேட்டு ஓடோடி வந்தான், உதவி செய்ய!
டாக்டர் மூர்த்தியின் கண்கள், பூர்ணிமாவின் கணவனுடைய கோப்பில் இருந்த ரிபோர்ட்டில் இருந்த வயதை கவனித்தது!
டாக்டர் மூர்த்தி துள்ளிக்கொண்டு எழுந்து வந்து முருகன் படத்துக்கு எதிரே விழுந்து வணங்கி எழுந்தார்!
" முருகா! உன் திருவிளையாடல் உனக்கு சிரிப்பை தருகிறது, எனக்கோ உயிர் போய் வருகிறது......இந்த தவறை கண்டுபிடிக்காமல் போயிருந்தால்......?"
ஆஞ்சியோ ரிபோர்ட்டு தவறான கோப்பில் புகுந்ததே, குழப்பத்தின் காரணம்!
எண்பது வயது நோயாளியின் ஆறு தடை ரிபோர்ட்டு, தவறாக முப்பது வயது நோயாளியின் கோப்பில் சேர்க்கப்பட்டிருந்தது!
டாக்டர் மூர்த்தி செய்த முதல் வேலை, பூர்ணிமாவுக்கு போனில் தகவலை தெரிவித்தார்!
இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி! பெயர் மாற்றப்பட்டுள்ளன
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.