(Reading time: 8 - 15 minutes)

பாட்டாவும் பேரனும் விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்.குட்டி நாயை  இருவரும் குனிந்து பார்க்கிறார்கள். டோனியின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்குகிறது. அதன் வேகம் பறைமேளம் அடிப்பதுபோல் அவன் நெஞ்செலும்புகளை பதறவைக்கிறது. அவனை அணைத்திருக்கும் வயோதிபரால் அதை உணரமுடிகிறது.

"பாட்டா! அந்த குட்டி நாய் தூங்குகிறதா?" டோனி கேட்கிறான்.

 “இல்லை!, அது கர்த்தரிடம்  போய்விட்டது“.பேரனின் பிஞ்சு உள்ளம் நோவதை அவரால் தாங்க முடியவில்லை. 

அந்த நாயை உரிமை கொண்டாட ஒருவரும் இல்லை .டோனியும் பாட்டாவும் அந்த குட்டிநாயை எடுத்துக் கொண்டு இடுகாட்டை நோக்கி போகிறார்கள். காற்றின் உதவியுடன் கதவு தானேகவே திறக்கிறது. தாத்தா நாயை புதைக்க ஒரு குழி தோழண்டுகிறார்.

டோனி தூரத்திலிருந்த காட்டுப்  பூ ஒன்றை பறித்து வருகிறான். தாத்தா நாயை குழியில் வைக்கிறார். டோனி சிவத்தப் பூவை அந்த நாயின் மேல் வைக்கிறான். பெயர் தெரியாத அந்த நாய்க்கு இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தன. அது அனாதையாக இறக்கவில்லை!

அவர்கள் வீட்டை நோக்கி மௌனமாக நடக்கிறார்கள். அவர்களைக் கடந்து, அவசரமாக செல்லவேண்டும் என்பதுபோல, காற்றும் மேலும் வேகமாக வீசுகிறது.

அதற்குச் செல்ல பல இடங்கள் இருக்கின்றன. அடர்ந்த புற்களையும், பற்றைகளையும்மரங்களையும் தடவிச் சென்று எதிர்வரும் எதையும் கடந்து செல்ல வேண்டும். வாழ்க்கையை எவ்வளவு வேகமாக ஓடிமுடித்தாலும், எங்கு சென்றாலும் அது நாளையும் திரும்பிவரும்மீண்டும், மீண்டும் தொடர்ந்துவரும். ஆனால் மனிதனும் மற்ற உயிரினங்களும் அப்படி மீண்டும், மீண்டும் திரும்பி வருவதில்லை!

காலம் ஓடிவிட்டது….

தனது தோல் சுருக்கங்கள் கரடுமுரடானதை டோனி அவ்வளவு அவதானிக்கவில்லை. அவன் அமர்ந்து சாய்வதற்கு எவராவது அல்லது ஏதாவது கிடைக்குமா என்று ஏங்குகிறான், தன்னை சிறிது சூடாக்கி, ஆதரவு கொடுக்க.

இன்று தாத்தா இறந்தநாள். தாத்தாவின் புதைகுழியின் மேலிருந்த சிலுவையைப் பார்த்தவண்ணம் இருக்கிறான். கண்களில் கண்ணீர் கசிகிறது.

முழங்கால்களை மடித்தபடி அங்கு உட்காந்திருக்கும் அவனுக்கு தாத்தாவின் ஞாபகம் வருகிறது. அவருடன் அந்த இடுகாட்டில் தான் கழித்த நாட்களையும், தான்அவரிடம் இருந்து பெற்ற அறிவையம், தாத்தா தன்னிடம் மறைத்த உண்மைகளையும் நினைத்துப் பார்க்கிறான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.