(Reading time: 6 - 12 minutes)

மறப்பது அவளது முகத்தில் மென்நகையை தோற்றுவித்தது.. அதிலும் எந்நேரமும் செல்ஃபொனே கதியென கிடப்பதற்கு பதில் இவ்வாறு விளையாடுவது எவ்வளவோ மேல் என்று என்னும் ரகம் லதா..

அப்பொழுது ஒரு சிறு பெண் குழந்தை சுமார் மூன்று அல்லது நான்கு வயதிருக்கும்.. இவர்கள் விளையாடிக் கொண்டிருந்த கால் பந்தை எடுத்து.. தானும் இவர்களுடன் விளையாட வருவதாகக் கூற.. கிரண் வேகமாக வந்து அவள் கையில் இருந்த பந்தை பிடுங்க.. அந்த சிறுமி அவன் வேகத்தை எதிர் பார்க்காமல் கிழே விழுந்தாள்.. இது அனைத்தும் க்ஷன நேரத்தில் நடந்தேறியது..

பார்த்துக் கொண்டிருந்த லதா வேகமாக வந்து அந்த சிறுமியைத் தூக்கிக் கொண்டே.. “கிரண் என்ன இது..” என முறைக்க..

அச்சிறுமி இப்படி விழுவாள் என கிரணும் எதிர் பார்க்கவில்லைப் போல.. சுருங்கி விட்ட முகத்துடன்..

ம்மா.. நாங்க பாய்ஸ் கூட தான் விளையாடுவோம்.. வீ டோன்ட் ப்ளே வித் கேர்ல்ஸ்..” என திடமாக உறைக்க.. சுற்றியிருந்த வாண்டுகளும் அதை அமோதிக்க.. அவனை ஒருப் பார்வைப் பார்த்து.. அச்சிறுமியை தூக்கி சென்றாள்..

இவர்களும் இதனை மறந்து.. தங்களது விளையாட்டை தொடர.. சில நிமிடங்களுக்குப் பிறகு.. பெரும் கூச்சல் சத்தம் கேட்க.. என்ன வென்று இந்த வாண்டுகள் தங்களது விளையாட்டை விடுத்து.. சத்தம் வந்த இடம் நோக்கி சென்றனர்..

அங்கு லதா மற்றும் அப்பொழுது கிழே விழுந்த சிறுமியுடன் இன்னும் சில சிறுமிகள் + பெண்கள் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.. லதா அந்த குட்டி பாப்பாங்களுக்கு ஏற்ப பேட் செய்ய.. கீழ் விழுந்த சிறுமி பௌல் செய்துக் கொண்டிருக்க.. லதா அவுட்டாக.. அதற்கு தான் எல்லரும் அவுட் என கத்திக் கொண்டிருந்தனர்..

லதாவிற்கு நன்றாக தெரியும் தன் மகன் க்ரிக்கெட் மட்டையைப் பார்த்துவிட்டால் கால் பந்தாவது ஒன்னாவது என ஓடி வந்துவிடுவானென.. அவள் கணிப்பு சரியென்பதுப் போல.. கண்கள் பளபளக்க கிரண் தனது கூட்டாளிகளுடன் நின்றுக் கொண்டிருந்தான்..

லதா அவனை பார்க்க.. “ம்மா நாங்களும் க்ரிக்கெட் விளையாட வரோம்..” என அவன் கூற..

கிரண் குட்டி.. நாங்க கேர்ல்ஸ் விளையாடறோம்.. நீங்க கேர்ல்ஸ் கூட விளையாட மாட்டேன் சொன்னீங்க ல.. “ எனப் போலி ஆச்சரியம் காட்டி.. கிரணின் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்க..

அந்த குட்டி வாண்டிற்கு என்ன சொல்வதென்பது தெரியவில்லை.. ஆனால் நாம் அந்த சிறுமியிடம் சற்று முன்பு கூறியது சரி இல்லையோ என யோசிக்க தொடங்கினான்.. அப்பொழுது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.