(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி

கிரன் கண்ணா இங்க வாடா.. அம்மா சொல்றதை கேளு.. சாப்பிட்டு போய் விளையாடுவியாமா..” என்று அந்த அப்பார்ட்மென்ட்டின் பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த தன் நான்கு வயது மகனை அழைத்துக் கொண்டிருந்தாள் லதா.

கண்ணா, வெயில்ல விளையாடனுமா இப்படி.. சாயந்திரமா வரலாம்ல..” என தன் முன்னே மூச்சிரைக்க வந்து நின்ற தன் செல்ல கன்றின் தலையிலிருந்து வடிந்த வியர்வையை தன் துப்பட்டாவால் துடைத்தவாறே அவள் கேட்க..

ம்மா.. ப்ளீஸ்.. ஒரு ஃபைவ் மினிட்ஸ் ம்மா.. ம்மா வாங்க.. நான் உங்களுக்கு ஜங்கில் ஜிம் ல ட்ரிக்ஸ் காமிக்கறேன்..” என கைக் குவித்து அவளை அழைத்துச் சென்ற விதத்தில் மயங்கி தான் போனாள் அந்த இளந்தாய்..

அவன் அந்த விளையட்டு உபகரணத்தில் அனாசியமாக தாவி உட்புகுந்து, தலை கீழாக தொங்க.. தாயாக அவள் பதறி தான் போனாள்.. “டேய் பார்த்து.. விழுந்திடப் போற.. நீ எனக்கு காமிச்சதுப் போதும்.. வாப் போகலாம்..” என அவனை இழுத்துத் தூக்கிக் கொண்டு செல்ல.. அங்கிருந்த தன் நண்பர்களிடம்ஈவ்னிங்க் ஃபுட்பால் கேம் இருக்கு டா.. மறந்துறாதிங்க..” என அந்த வாண்டு பெரிய மனிதனாக உறைக்க..

ஆமா பெரிய மேட்ச்.. பால் சைஸ்ல இருந்திட்டு..” என மகனின் முகத்தை தன் மூக்கால் அவள் வேகமாக உரச.. தன் தாய் தன்னை கொஞ்சிய விதத்தில் கெக்கலித்து சிரித்தான் கிரண் குட்டி.

சும்மாவே இந்த குட்டி வாண்டுகளை வீட்டில் நிற்க வைப்பது மிகவும் கஷ்டம்.. இதில் சம்மர் ஹாலிடேஸ் என்றால் கேட்கவா வேண்டும்.. அந்த நூறு வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி மாலைப் பொழுதில் பிள்ளைகளின் கூச்சலிலும்.. பெரியர்வர்களின் வாக்கிங்க் + அரட்டைக் கச்சேரியிலும்.. தாயார்கள் தங்களின் பிள்ளைகளை கவனித்துக் கொண்டே அங்கங்கு இரண்டு மூன்றுப் பேராக கூடி பேசிக் கொண்டிருப்பதிலும் சலசலத்துக் கொண்டிருந்தது..

டேய் கிரண் அவங்க கோல் போட்டுடாங்க டா.. கண்டிப்பா நம்ம நெக்ஸ்ட் கோல் போட்டே ஆகனும்..” என கிரணின் வயதை ஒற்றிய இன்னொரு வாண்டு வீருக்கொண்டு உறைக்க.. கிரணும் அந்த கால் பந்தை தள்ளிக் கொண்டு வேகமாக ஓடினான்.. கிரணின் ஒற்ற வயதில் இருந்த பசங்கள் பத்துப் பேர் இரண்டுக் குழுவாக பிரிந்து போட்டியிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.. இரண்டுப் பக்கம் இரு குட்டி சைக்கிள் வேறு (அதான் ஃபுட்பால் நெட்ங்க அவங்களுக்கு :D)

இதை ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த லதாவிற்கு சிரிப்பாக இருந்தாலும்.. பிள்ளைகள் விளையாட்டு என்று வந்தால் பசி தூக்கம் என அனைத்தையும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.