(Reading time: 8 - 15 minutes)

" பேசாம அவரை சின்னப்பிள்ளைங்களுக்கு டியூஷன்சொல்லித்தரச் சொல்லு,வருமானமும் கிடைக்கும்,அவருக்கு பொழுதும் போகும்சரியா?"

" அவர் சம்பாதித்தது,போதும். இனாமாகவே, ஏழைபிள்ளைங்களுக்கு சொல்லித்தரட்டும். புண்ணியமாவதுசேரும்! அதுக்கு உடம்புவணங்காதுடா அவருக்கு!"

" அம்மா! நீங்க எப்படியோ எங்களை நல்லாபடிக்கவைச்சு வேலைக்குஅனுப்பி கல்யாணமும் செய்துவைத்து ஆளாக்கிட்டீங்க!நல்லவேளையா, தாத்தாநமக்கு இந்த வீடு, கிராமத்திலே கொஞ்சம் நிலம், வைச்சிட்டுப் போனார்இல்லேன்னா, ......."

" உங்கப்பாவும் மற்றவங்களைப் போல, நல்லவேலைக்குப் போய், நிறையசம்பாதிச்சு, இதைவிட நல்லநிலையிலே வைச்சிருப்பாரு!அதை விடு, இப்படி நைட்டியூடி பார்த்து தூக்கமில்லாமகஷ்டப்படறியே, மற்றவங்கமாதிரி ஆபீஸ் வேலைக்குப்போயேண்டா!"

" அம்மா! என் பிளானேவேற! கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், இந்த தொழிலைகற்றுக்கிட்டு, சொந்தமாநானே பிசினஸ் பண்ணப்போறேம்மா!"

" அதுக்கு நிறைய பணம்தேவைப்படுமேடா!"

" அதுக்கு அரசாங்கம்ஒரு திட்டம் வைச்சிருக்கா,அந்த திட்டத்திலே முதல்போட பணம் கடனா தருவா!மாசாமாசம் ஒழுங்கா வட்டிகட்டிட்டா, தொடர்ந்துகடன் தருவாங்க! பிசினஸ்வளர்ந்தபிறகு, கடன் வாங்கறஅவசியம் இருக்காது...."

" சோமு! இந்தமாதிரிசில நல்லதும், அரசு செய்வதை உங்கப்பா ஏன்சொல்ல மாட்டேங்கறாரு?"

" சிலபேர் சுபாவமே,குற்றம் சொல்வதுதான்! அதை விடு, உன்மருமகள்இன்னமுமா தூங்கறா, அவளை இப்பவே போய்எழுப்பறேன்...."

" அவ எங்கேடா வீட்லேஇருக்கா, அவ பிரைவேட்டாஎம்.பி.ஏ. படிக்கிறாடா! அவளை தடுக்காதே! விலைவாசி விஷம்போல ஏறியிருக்குநீங்க ரெண்டு பேரும் வேலைபார்த்து நிறைய சம்பாதிச்சுஉங்க பிள்ளைங்க வசதியாவாழ வழி பண்ணுங்கடா!"

" அம்மா! இப்ப நிலமைரொம்ப மோசமாயிருக்கு,பி.ஈ.படிச்சவன் வேலைகிடைக்காம, டீக்கடையிலேவேலை பார்க்கறான்....எம்.ஏ.பாஸ் பண்ணிட்டு விவசாயம்செய்கிறான்..கொரோனாவந்தபிறகு, நிலமை இன்னும்மோசமாயிடுத்து........"

" ஆமாம்டா! உங்கப்பாநேத்திக்கு சொன்னாரு, பலபெரிய ஓட்டல்கள், கடைகள்,தொழிற்சாலைகள், வரவுஇல்லாம மூடிட்டாங்களாம்,வேலையில்லா பிரச்னைஅதிகமாகி வாலிபர்கள்தற்கொலை முடிவெடுக்கறதாசொன்னாரு, பேப்பரைபடிச்சிட்டு........."

" அம்மா! அப்பா வராரு,அப்புறமா பேசுவோம்...."

முதியவர் சோமுவைக்கண்டதும், " சோமு! ஏன்டாநைட் டியூடி பார்த்தும் ஃபிரெஷா இருக்கியே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.