(Reading time: 8 - 15 minutes)

" என்னமோ போங்க!போன உயிர்கள் திரும்பிவருமா?"

" சோமு! உங்கப்பா மூளையை கழற்றி வைச்சிட்டுபேசிக்கிட்டே இருப்பாரு,நீ போய் தூங்கு!"

" சரிம்மா!"காலைப் பொழுது முடிந்துமதியமும் வந்துவிட்டது. நண்பகல் நேரத்தில் வழக்கமாகவகுப்பு முடிந்து திரும்பிவரும்மருமகள் உமாவை இன்னமும்காணோமே என கிழவி வாசலைப் பார்த்துக்கொண்டுதவித்தாள்.

பொறுமையிழந்து, கணவனிடம் " கொஞ்சம்கூடபொறுப்பே இல்லாமல் எப்படிஉங்களாலே இருக்கமுடியுது? உமா இன்னும் வரலியேன்னு கவலையே இல்லாம இப்படிஇருக்கீங்களே, போய் அவளை தேடுங்க!"

முதியவர் பதில் பேசாமல்கிளம்பினார். அதற்குள் உமாவந்துவிட்டாள்.

" என்னாச்சு உமா? ஏன்லேட்?"

" அத்தை! வர வழியிலேஜனங்க கூட்டமா கூடி வழிமறிச்சிட்டாங்க....."

" ஏன்?"

" அந்த தெருவிலே ஒருவீட்டிலே வசிக்கிறவர், சற்றுமுன்பு ஆஸ்பத்திரியிலே இந்தகொரோனா நோயிலே செத்துப் போய்ட்டாராம், அவர் பாடியை ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு கொண்டுவரக்கூடாது, நேரே மயானம்எடுத்துப் போகணும்னு தெருஜனங்க மறியல் பண்றாங்க!"

" இதென்ன கூத்து! புத்திகெட்டுப் போயிடிச்சா? ஐயோ பாவமே! செத்துப்போனவரோட உறவுபெற்ற பிள்ளை வெளிநாட்டில்இருந்து வரவேண்டியிருந்தா,என்ன செய்வாங்க! நாள்கணக்கிலே பாடியைமயானத்திலே வைச்சிக்கமுடியுமா?"

" அம்மா! ஏதோ என்னால் முடிந்ததை செய்துவிட்டு வரத்தான் லேட்டாகிவிட்டது. போலீஸை போனில்கூப்பிட்டு வரவழைத்து, கூடியிருந்த ஜனங்களுடன் பேசிசமாதானப்படுத்தி, கூட்டத்தை கலைந்துபோகவைத்துவிட்டேன்........"

கிழவி மருமகளைகட்டியணைத்து முத்தமிட்டுபாராட்டிவிட்டு, கணவனிடம்" இப்படி ஒவ்வொருவரும்தங்களால் முடிந்த உதவியைசமூகத்துக்கு செய்யணும்!அது தப்பு, இது சரியில்லைஎன்று குற்றம் கண்டுபிடித்துகுறை சொல்லி பொழுதைப்போக்கக்கூடாது!"

சோமு அங்குவந்து கைதட்டி தாயைப் பாராட்டிமகிழ்ந்ததோடு, மனைவியைகட்டியணைத்து தட்டாமாலை சுற்றி கீழேஇறக்கியபின், தந்தையைபார்த்தான்.

முதியவர் தலை குனிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.