(Reading time: 8 - 15 minutes)

டியூடிநேரத்திலே தூங்கினியா?" என்று கேட்டதும், கிழவிஅவர்மீது பாய்ந்து சொற்போர் தொடுத்தாள்.

" ஏங்க! குற்றம்கண்டுபிடிக்கிற புத்தி உங்களைவிட்டுப் போகாதா?அவன் கஷ்டப்பட்டு வேலைசெய்துவிட்டு வீட்டுக்கு வந்தால், தூங்குடான்னு சொல்லாம, இப்படி பேசஎப்படி மனசு வருதுங்க?"

" சும்மா தமாஷாசொன்னேன், சீரியஸாஎடுத்துக்காதே!"

" அப்பா! வாக்கிங் எங்கெங்கே நடந்தே?"

" உஸ்மான் சாலை வழியா ஜி.என். சாலை போய் துரைசாமி சாலைவழியே திரும்பி வந்தேன்...."

"அப்பா! உஸ்மான் சாலையிலே ரெண்டு ஃபிளைஓவர், ஜி.என். சாலையிலேரெண்டு ஃபிளை ஓவர், துரைசாமி சாலையிலே சப்வேபார்த்தியா? அரசு நம்மசௌகரியத்துக்காக பலகோடி ரூபாய் செலவிலே செய்திருக்காங்க இல்லையா"

" ஆமாம், ஒவ்வொருவேலைக்கும் பல கோடி ரூவாலஞ்சம் வாங்கியிருப்பானுங்க"

" அப்பா! உன்னை திருத்தவே முடியாது! லஞ்சம்வாங்கியிருக்கலாம், நல்லதுசெய்திருக்காங்கன்னு ஒருதரமாவது சொல்லேன்...."

" சரி, போய் தூங்கு!இல்லேன்னா அம்மா என்னைதிட்டுவா......."

" அப்பா! கொரோனாதொற்று உலகத்தையே ஆட்டிப் படைக்கிறதே, நம்மபிரதமர் மோடி இந்த நாட்டுமக்களை காப்பாற்ற நிறையசெய்கிறாரே, அதைப்பற்றிஎன்ன சொல்றே?"

" நிறைய செய்து என்னபயன்? தப்பா செய்கிறாரே!எத்தனை தொழில்கள், மாசக்கணக்கிலே முடங்கிப்போய்தொழிலாளர்கள் வேலைஇழந்து, பட்டினியிலே சாகறாங்க, நோயாளிங்ககவனிப்பாரில்லாம நடுவீதியிலே சாகறாங்க,செத்தவங்களை புதைக்கக்கூட எத்தனை தகராறு,காலேஜ், பள்ளிக்கூடம், மூடிமாணவர்கள் எதிர்காலமேகேள்விக்குறியாகி விட்டது.."

" உலகமுழுவதும் இதேநிலமைதானே! அத்தனைபயங்கரமான தொற்று!"

" சரி, இந்த தொற்றுபோக இன்னும் எத்தனை மாசம் ஆகுமோன்னு இப்பஊரடங்கை எடுத்துட்டாங்கஇல்லே, ஊரடங்கினாலேஇந்த தொற்றை தடுக்க வழியில்லேன்னு தெரிஞ்சிபோச்சுஇல்லே! மூடின தொழிற்சாலைகள், வேலைஇழந்த தொழிலாளர்கள், மூடின ஓட்டல்களினாலேபாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள்வாழ்க்கை எப்படி சீராக்கப்போறாங்க?"

" அப்பா! இது ஏதோமோடியினுடைய சொந்தவேலை மாதிரி அவரை கேள்வி கேட்கிறது தப்பு, இதுநம்ம எல்லோருடைய பிரச்னை, ஊர்கூடி தேர்இழுக்கிற வேலை!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.