(Reading time: 6 - 12 minutes)

அதுக்கும் response வரலைனா "Sorry to disturb. have a great sleep. good night dear"nu msg பண்ணுங்க." - மாதவன்

ஒரு நிமிடம் தலை சுத்தியது அர்ஜுனனுக்கு. உலகம் உருண்டை என்பது புரிந்தது.

"சார்.என்ன சொல்றீங்க.இதுக்கு பதிலா ரெண்டு செருப்பால என்ன அடிச்சிருங்க" - அர்ஜுன்

"அப்பா இந்தாங்க என்னோட செருப்ப எடுத்துக்கோங்க" - பாதி தூக்கத்தில் இருந்த ஈஷா சட்டென்று தூக்க கலக்கத்தில் புலம்பினாள்

"இவ வேற தூக்கத்துல உளர்றா. அதான் சொன்னேன், என்னோட டிப்ஸ் உங்களுக்கு set ஆகாதுன்னு" - மாதவன்

"என்ன அவமான படுத்திட்டு இருக்கா. நீங்க இன்னும் போய் அவமானத்தை வாங்கிக்கோ னு சொல்றீங்க . என்ன லாஜிக் சார் இது" - அர்ஜுன்

"நீங்க அப்டி பண்ணலைனா உண்மையான love feel உங்களுக்கு தெரியாது. பயம்,பதட்டம் மட்டும் தான் தெறியும் அர்ஜுன்" - மாதவன் .

"புரியலையே" - அர்ஜுன்

மாதவன் தொடர்ந்து கூறினான் -

"உங்களுக்கு புடிச்சவங்க கிட்ட பேசும்போது உங்களோட ஒரு பாதி மனசு தான் love feel பண்ணுது . இன்னொரு பாதி பயத்துல இருக்கு.

1) அவ எனக்கு புடிக்காத மாதிரி நடந்துப்பாளோ

2) என்ன விட்டு போய்டுவாளோ

3) அவளுக்கு புடிக்காத மாதிரி நா ஏதாவது பேசிடுவேனோ.

4) அவளை correct பண்ற capability எனக்கு இல்லையோ

இப்டி நிறைய நிறைய பயம்."

"ஆமா. உண்மை தான்." - அர்ஜுன்

"first அந்த பயத்தை நீங்க கடக்கணம். அதை கடந்தால் தான் நீங்க உண்மையான love'a feel பண்ண முடியும்.

அதுக்கு நீங்க ஒரு experiment பண்ணனும். ரொம்ப நாள் வேண்டாம். தேதி fix பண்ணிக்கோங்க. ஒரு one month இந்த experiment பண்ணுங்க." - மாதவன்

"என்ன experiment அது?" - அர்ஜுன்

"நீங்களே போய் insult வாங்கிக்கோங்க .என்ன insult பண்ணுன்னு நீங்களே அவங்க கிட்ட சொல்ல வேண்டாம். but அவங்க உங்கள hurt பண்ற opportunity நிறைய வரும். அப்போ நீங்களே தேடி போய் நிறைய insult வாங்கிக்கோங்க . infact சொல்லணும்னா அவங்க உங்கள கேவலமா treat பண்ணா , அது இன்னும் best" - மாதவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.