(Reading time: 7 - 13 minutes)

    ஐயா எப்பவும் வெள்ளை வேட்டி, பை வைத்த வெள்ளை சட்டை, அந்தப் பையில் ஒரு பேனா, தோள் பட்டையில் ஒரு வெள்ளைத் துண்டு, கையில் நான்!

    இப்படித்தான், வெளியே செல்வார். வகுப்பு நடக்கும் போது, நானும் அருகிலிருந்து கேட்டு ரசிப்பேன்.

    மாணவர்கள் வகுப்பில் ஆர்வமுடன் ஈடுபட, நிறைய கதைகள் சொல்லி விளக்கி பாடம் நடத்துவார்.

    மாணவர்களையும் பேசவைத்து உற்சாகப்படுத்தி மகிழ்விப்பதனால், அவர் வகுப்பையும் அவரையும் ஒருவரும் மறக்கவே முடியாது.

     இப்படித்தான், ஒருநாள் அவர் வீதியில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன், 'ஐயா! வணக்கம்! என்னைத் தெரியுதா?' என்று கேட்டான்.

   ஐயா சிறிது நேரம் கழித்து, 'நீ....தியாகு தானே?' என்றதும், அந்த இளைஞன் அவர் காலில் விழுந்தான்.

   அவனை எழுப்பி, ஐயா விசாரித்தார்.

" ஐயா! முப்பது வருஷம் ஆகியும், எத்தனையோ பேர் உங்களிடம் படித்திருந்தாலும் என்னை நினைவில் வைத்து இருப்பது, என் பேறு, ஐயா!"

 " தியாகு! நல்லா இருக்கியா? எங்கே, என்ன பண்ணிண்டிருக்கே?"

 " ஐயா! உங்களைப் பார்க்கத்தான் உங்க வீட்டுக்கு போயிருந்தேன், அம்மா சொன்னாங்க, நீங்க வாக்கிங் போயிருக்கிறதாக! எனக்குத் தெரியும், நீங்க வழக்கமா வாக்கிங் போகிற இடம்! உடனே வந்துட்டேன், ஐயா! முதல்லே, இதை கையிலே கட்டுங்க!" என்று புதிய ரிஸ்ட் வாட்ச் ஒன்றை அவர் கையில் கட்டினான்.

 ரொம்ப அழகாயிருந்தது! " தியாகு! விலை அதிகமா இருக்குமே, எதுக்குப்பா இதெல்லாம்?" " முதல்லே நீங்க கேட்ட விவரத்தை சொல்றேன்! நான் இப்ப அமெரிக்காவிலே பெரிய விஞானியா இருக்கேன்! என் ஆராய்ச்சி பற்றி, அமெரிக்கா அரசே, புகழ்ந்து பாராட்டி, அவார்டு கொடுத்திருக்காங்க! அந்தப் பெருமை எனக்கு கிடைக்க, நீங்கதான் காரணம்!"

 " போப்பா! நீ ஆராய்ச்சி செய்தே, நான் செய்யலியே!"

  " நான் ஆராய்ச்சி செய்ய தூண்டுகோலே நீங்கதான்!"

  " நானா?"

  " மூணாம் வகுப்பு படிக்கும்போது, நீங்க என்னை ' எதிர்காலத்திலே நீ என்னவாகணும்னு நினைக்கறே'ன்னு கேட்டீங்க! அதுக்கு நான், சிறுபிள்ளைத் தனமா, 'மற்றவங்களுக்குத் தெரியாத புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்து உலகத்தையே என்னைப் பார்த்து

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.