(Reading time: 7 - 13 minutes)

வியக்கும்படியா பெரிய விஞானியா ஆகப் போறேன்'னு சொன்னேன்! அப்ப நீங்க பாராட்டி,'தியாகு! நிச்சயமா நீ உன் லட்சியத்தை அடைவே'ன்னு உற்சாகப்படுத்தினீங்க!

  அது பலிச்சிடுச்சி! உங்க வார்த்தைகள் என் மனசிலே பசுமரத்து ஆணியா பதிந்து விட்டது!"

   இப்படி நிறையபேர் அவரை அப்பப்போ புகழ்வதை நான் கேட்டு மகிழ்வேன்!

   ஐயாவுக்கு ரெண்டு பிள்ளைங்க, ஒரு பொண்ணு! அம்மாவும் ஐயாவைப்போல எளிமை, அடக்கம், சிரித்த முகம், நெற்றியில் அழகாக குங்கும பொட்டு, அம்பாள் மாதிரி என் கண்ணுக்குத் தோணும்.

  என்ன, மறுபடி என்னை முறைக்குறீங்க? 'உனக்கேது கண்?'னு கேட்கறீங்களா?

   காது இருக்கலாம், வாய் இருக்கலாம், கண் இருக்கப் படாதா?

     என்னைப் பேசவிடுங்க, ஐயாவின் மூத்த மகன் முருகன் எம்.ஏ. பாஸ் பண்ணி, ஒரு பெரிய கம்பெனியிலே நல்ல பதவி வகித்து நிறைய சம்பாதிக்கும் மகிழ்ச்சியிலே, ஒருநாள் புது குடை ஒண்ணு வாங்கிவந்து, ஐயாவுக்கு கொடுத்தான்!

  'எனக்கு எதுக்குடா புது குடை? இவன்தான் இருக்கானே!'ன்னு என்னைக் காட்டினார்.

 ' அப்பா! அதுக்கு ரொம்ப வருஷமாகி, லொட லொடன்னு சத்தம் போட்டு அசிங்கப்படுத்துதுப்பா! அதை தூக்கி எறிஞ்சிட்டு, இந்தப் புதுசை வைச்சுக்குங்க!" என்று சொன்னதோடு நிற்காமல், என்னை எடுத்து ஒரு மூலைக்கு வீசி எறிந்தான்!

    எனக்கு அழுகை வந்தது!

    ஐயாவுக்கு வந்ததே ஒரு கோபம்! அப்பப்பா! நரசிம்ம அவதாரமே எடுத்துட்டாரு!

  'முருகா!' ன்னு சத்தம் போட்டார், பாருங்க!, உள்ளேயிருந்து அம்மா ஓடி வந்துட்டாங்க!

ஒரு மூலையில் வீசப் பட்டிருக்கிற நான் அம்மாவின் கண்களில் பட்டதும், உடனே அம்மாவுக்குப் புரிந்துவிட்டது!

     " இத பாருங்க, முருகனுக்கு இந்தக் குடையைப்பற்றி தெரியாது, அதனாலே அவன் அப்படி பண்ணிட்டான், நீங்க அமைதி யாக இருங்க! நான், அவன் புரிந்துகொள்ளும்படியா விவரமா சொல்றேன், குடையின் அருமையை!" என்று ஐயாவை சமாதானப் படுத்தினாங்க, அம்மா!

     ஐயா, தாவி வந்து, என்னை கையில் எடுத்து, தடவிக் கொடுத்து, கண்ணில் ஒற்றிக்கொண்டார்!

 அவர் கண்களில் நீர் வந்ததும், நானும் அழுதேன்!

  " முருகா! நீ அப்பாவுக்கு புதுக் குடை வாங்கித் தந்தது, ரொம்ப சந்தோஷம்!  ஆனா, பழைய குடைக்கு ஒரு பின்னணி இருக்கு, கேளு!

    இந்தக் குடையை, என் அப்பா, உங்கப்பாவுக்கு எங்க கல்யாணத்தின்போது, தந்த போது,

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.