(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - சுகம்! சுகம்! சுகம்! - ரவை

" குணவதி! உன் புருஷன் ஏன் சோகமா இருக்காரு, பிசினசு நல்லா ஓடுதில்லே?"

 " அப்பா! அவர் ஒரு பைத்தியம், அவரை விடுங்க!"

 " அப்படி விடமுடியாது, குணவதி! ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லணுமில்லே, சொல்லு, ஏன் அவரு.....?"

" இந்த வருஷத்து லாபம், முப்பது கோடி! இது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா இல்லே துக்கப்படற விஷயமா?"

 " மை காட்! அப்படியா! பார்ட்டியே நடத்தி கொண்டாடற விஷயமாச்சே!"

 " அவருக்கு என்ன சோகம்னா, இந்த லாபம், போன வருஷ லாபத்தைவிட குறைவாம், பத்து கோடி ரூவா,......என்ன சொல்றது, அவரை?"

 குணவதியுடன் அவள் தந்தையும் மனமார சிரித்த போது, மாப்பிள்ளை வந்தார்.

"என்ன இங்கே சிரிப்பு? அவனவன் சோகத்திலே உள்ளபோது! போய் வேலையைப் பாருங்க.....!"

 " மாப்ளே! உட்கார்ந்து பேசுவோமே.....சோகமா இருந்தா, எல்லாம் நேராகிடுமா? என்ன செய்ய வேண்டும்னு யோசிக்கணும், அதுக்கு மனமும் அறிவும் தெளிவா இருக்கணும், எப்ப தெளிவா இருக்கும்? மனம் சந்தோஷமா இருந்தால்தான், தெளிவா இருக்கும்......"

" மாமா! ஒவ்வொரு பைசா சம்பாதிக்கறதுக்கு, எத்தனை கஷ்டப்படணும், தெரியுமா? பத்து கோடி, குறைஞ்சிருக்கு, ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?"

" கொக்குக்கு ஒண்ணே மதின்னு சொல்வாங்க, அது ஒண்ணையே நினைத்து, சோகப்படாம, சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும், யோசிக்கணும்!

நடுவிலே, மூணுமாசம் இந்த தொற்று நோயிலே, எத்தனையோ பிசினசுகள் மூடிவிட்ட நிலையிலே, உங்க பிசினசு மட்டும் லாபம் தந்து இருக்கிறது, சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே?"

" அதுசரி, மாமா! ஆனா, கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்கலேன்னா...."

அப்போது, அங்கே குணவதியின் மகன் மகேசன் வந்தான். குணவதியின் தந்தை அவனைக் கேட்டார்.     " மகேசா! எதுடா சுகம்?"     " தாத்தா! தலைக்கு மேலே, ஃபேன் ஃபுல் ஸ்பீடிலே சுற்ற, தலையிலிருந்து கால் வரை போர்த்திண்டு படுத்துப் பாரு, அந்த சுகத்துக்கு ஈடு, இணையே கிடையாது."

" மாப்ளே! உங்களுக்கு சுகமா இருக்கணும் என்கிற ஆசையே இல்லையா? நான் குணவதியை தந்ததோடு, பத்து கோடி ரூவா சொத்தும் தந்திருக்கேன், ஜாலியா லைஃபை என்ஜாய் பண்ணுங்க! பிசினசை உடனே யாருக்காவது விற்று பணமாக்கி வைச்சுக்குங்க!"

" சரி, மாமா! குணவதி! உங்கப்பா சொன்னதை நீயும் கேட்டியோனோ? சம்மதம் தானே?"

15 comments

  • தாகமா இருக்கும் போது யாராவது தர தண்ணிர் சுகம், அதிகமா வெயில் போகும் போதும் மர நிழல் கிடைக்கும் போது சுகம், குட்டிய இருக்கிற வீட்டுக்கு வெளில or மொட்டை மாடில நின்னு நல்லா மூச்சுவிட்டு வேடிக்கை பார்க்கிறது சுகம் இப்படி நிறைய தோணுது உங்க கதை படித்து
  • [quote name=&quot;Preethishankar&quot;]Thanks uncle bt Tamil translate epdi pandrathunu tan therila ethachum specific ah app iruka ithuku[/quote]<br />I am not aware of!
  • Good evening dear Jeba! உங்க காமெண்ட் படிச்சதும் ஒரு சுகம்! அந்த சுகத்துக்கு ஈடே இல்லை!
  • Title different... Life a rasichu vazhanunmnu rompa super ah solitinga... Sampathikirathu mukiyam athai pola valkaiyai anupavithu valvathum mukiyame... Sugam sugam sugam... Story padipathilum oru sugam.. super
  • Good afternoon, dear Preethishankar! Thanks for liking my story! Story-writing is very simple! 1.தெரியலைங்கிற நினைப்பை விடுங்கள்! 2. உங்களுக்கு தெளிவாக தெரிந்த ஒரு விஷயத்தைப்பற்றி, ஒரு பக்கம் எழுதுங்க! 3. அதை திரும்பப் படித்து வர்ணனைகளை சேர்த்து ரெண்டு பக்கமாக நீட்டுங்க! 3. உங்களுக்கும் எழுத தெரிந்துவிட்ட துணிவு பிறக்கும். 4. உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவத்தை எழுதிப்பாருங்க! 5. நீங்கள் எழுத்தாளராகிவிட்டீங்க!
  • குட்மார்னிங், டியர்போர்ன் மதும்மா! வழக்கம்போல, எனக்கு முன்பே தாங்கள் படித்துப் பாராட்டியுள்ளது, சந்தோஷமாயுள்ளது! நன்றி!
  • Dear Dhanu! Good morning! You are a great writer! Your compliments give me enormous pride! Thanks a lot! Have a great day!
  • wow :clap: niraiya sugathai kathaiyin moolame therinthu,purinthu kondaayitru :grin: nalla kathai sir :hatsoff: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.