(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

சரவணனோ பதறிக்கொண்டு அவரிடம் வந்து நிற்க ஓங்கிய கையை மகள் மீது இறக்க முடியாமல் சரவணனின் மீது இறக்கினார். பளார் என்ற ஒரு அறை அவனின் கன்னத்தில் விழுந்தது, அதில் துடித்துப் போனாள் மலர் ஆனால் சரவணனோ புன்னகைத்தான்

  

”டேய் நான் உன்னை அடிக்கிறேன் நீ சிரிக்கற புத்தியில்லை உனக்கு” என ரவி திட்ட அதற்கு சரவணனோ

  

”எனக்கு அப்பா இல்லை உங்களைப் பார்க்கறப்ப உங்களை போல அப்பா எனக்கு இருக்கனும்னு ஆசைப்பட்டிருக்கேன், அப்பாங்க எப்படியிருப்பாங்கன்னு நிறைய பேரை பார்த்திருக்கேன், உரிமையா, பாசமா இருப்பாங்க, தப்பு செஞ்சா அடிப்பாங்க, எனக்கு இதெல்லாம் கிடைச்சதில்லை, சொல்லப்போனா என்னை யாரும் அடிச்சதில்லை, நீங்க என்னை அடிக்கவும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இப்படிதானே அப்பாக்களும் அடிப்பாங்க, தப்பில்லை பாசம் இருக்கற இடத்திலதானே உரிமையும் இருக்கும், என் மேல உங்களுக்கு நிறைய உரிமை இருக்கு, எனக்கு நீங்க அடிச்சது கூட வலிக்கலை ரொம்ப பிடிச்சிருக்கு, எனக்கு அளவில்லாத பாசம் காட்ட அம்மா இருக்காங்க ஆனா உரிமையா அடிக்க அப்பா இல்லை, மலரை விட எனக்கு உங்களைதான் ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க காதல் விசயம் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன், என் மேல தப்பு இல்லை, உங்க பொண்ணுதான் என்கிட்ட உரிமையா நடந்துக்கிட்டா, காதல்னா என்னன்னு புரிய வைச்சா அதுக்காக அவளையும் தப்பு சொல்லாதீங்க, என்ன இருந்தாலும் உங்க பொண்ணாச்சே, அவளுக்கு தப்பு செய்ய வராது, மலரு எனக்கு கிடைச்சா நீங்களும் எனக்கு கிடைப்பீங்கள்ல அது போதும் எனக்கு, இதுக்காக அவளை அடிக்காதீங்க பாவம் அவளுக்கு வலிக்கும், என்னை வேணா அடிங்களேன் எனக்கு இது பிடிச்சிருக்கு இந்த கன்னத்தில அடிச்சிட்டீங்க, இந்த கன்னம் காலியாயிருக்கு இந்த பக்கம் அடிங்க ப்ளீஸ்” என சொல்லி மறுகன்னத்தை காட்ட ரவிக்கு பேச்சே எழவில்லை. ஒரு வித அமைதி அங்கு தாண்டவமாடியது.

  

சில நாட்கள் கழித்து….

  

மலருக்கு திருமணமாகி அவள் வைதேகியின் வீட்டில் இருந்து வெளியேறி வந்தாள், காலை வேளையில் கோலம் போட வந்தவள் புள்ளி வைத்தவிட்டு பக்கத்து வீட்டைப் பார்த்தாள்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.