”நீங்க சொல்றதை நான் ஏன் செய்யனும்”
”அப்ப செய்ய மாட்ட” என்றாள் மிரட்டலாக அதைக்கேட்டு அவன் வைதேகியை பார்த்து
”அம்மா அவளை பாரும்மா என்னை மிரட்டறா” என சொல்ல வைதேகியோ மலரை பார்த்து
”இந்தாம்மா பொண்ணே யார் நீ, எதுக்கு என் பையனை மிரட்டற“ என கேட்க சந்தியா ஏதோ பேச வர மலர் தடுத்தாள்
”இதப்பாருங்க நான் ஒரு டாக்டர், உங்க பையன் தடுப்பூசி போட்டுக்கலையே நீங்க கவனிக்கலையா ஆமா நீங்களாவது தடுப்பூசி போட்டீங்களா“
”அதெல்லாம் நான் போட்டுக்கிட்டேன் டாக்டர்”
”அப்புறம் ஏன் உங்க பையன் மட்டும் இன்னும் தடுப்பூசி போட்டுக்கலை”
”அவனுக்கு ஊசின்னா பயம்”
”இப்படி சொன்னா நோய் வராம இருக்குமா என்ன“
“அவனுக்கு எதுவும் ஆகாதும்மா”
”நீங்க ஒரு டீச்சர், இப்படியா பொறுப்பில்லாம பேசறது”
”அதுக்கில்லை டாக்டரம்மா அவன் கொஞ்சம் பயப்படறான்”
”அதெல்லாம் முடியாது இவரால இந்தத் தெருவில இருக்கறவங்களுக்கு நோய் வந்தா என்னாகிறது நாளைக்கே அவருக்கு தடுப்பூசி போடனும்” என்றாள் அதற்கு வைதேகி சரவணனை பார்க்க அவனோ முடியாது என்பது போல் தலையாட்டி பாவமாக பார்க்க அதைக் கண்ட மலரோ