Page 19 of 66
இல்லையே”
”என் பேர் சரவணன், பக்கத்து வீட்டுக்கு இன்னிக்குதான் குடிவந்தேன்”
”ஓஹோ டீச்சர் குடும்பம்னு சொன்னாங்களே அது நீங்கதானா”
”ஆமாம் நாங்கதான் என் அம்மா டீச்சர் பேரு வைதேகி”
”அப்படியா சரி சரி ஏன் வெளிய நிக்கற உள்ள வாப்பா”
”நான் வரலை இந்தாங்க இதை வாங்கிக்குங்க நான் போகனும்”
”ஏன்பா அவசரம் உள்ள வா”
“இல்லை நான் வரலை உள்ள டாக்டரம்மா இருக்காங்க நான் வரமாட்டேன்”
”அவள் இருந்தா உனக்கென்ன பிரச்சனை”
என கேட்க அந்நேரம் மலர் அங்கு வந்தாள்
”ஓ வந்துட்டியா ஆமா நான் சொன்னதைதானே செய்த” என கேட்க அவனும் தலையை பலமாக ஆட்டி அவளிடம் சாப்பாடு பாக்ஸ்களை நீட்ட அவளோ
”உள்ள வந்து வை”
”இல்லை நான் வரலை நான் போறேன்” என்றான் சோர்வாக
”கேட்கலை கேட்கலை”
”நான் வரலை நான் போறேன்” என்றான் சத்தமாக