அழைக்க அவரும் சிரித்தபடியே அமர அவருக்கும் பரிமாறினான். அவர்கள் சாப்பிடலானார்கள் மிகவும் ருசியாக சமைத்திருந்தான் சரவணன், சந்தியாவும் ரவியும்
”ஆஹா சூப்பரா இருக்கு தம்பி”
”சாப்பாடு பிரமாதம்” என சொல்ல சரவணன் ஆசையாக மலரை பார்த்தான் அவள் ஏதாவது சொல்வாள் என எதிர்பார்க்க அவளோ அமைதியாக சாப்பிட்டு முடித்து எழ அவனோ
”ஏங்க மலரு என்ன எதுவுமே சொல்லாம போறீங்க”
”ஓ ஆமாம்ல மறந்தேப் போயிட்டேன் நாளைக்கு காலையில 9 மணிக்கு ரெடியாயிரு, உனக்கு தடுப்பூசி போட கூட்டிட்டுப் போறேன் சரியா” என சொல்லிவிட்டு அவள் அறைக்குச் சென்றுவிட இடிந்துப் போனான் சரவணன், அவனின் நிலைமையைக் கண்ட ரவிக்கு ஒருமாதிரியாகிப் போனது
”சரவணா என்னப்பா ஒரு மாதிரியாயிட்ட” என கேட்க அவனோ அவரிடம் சென்று
”உங்களை எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை சரி மலரப்பா மலரப்பா எனக்கு ஊசின்னா பயம் அது உங்க பொண்ணுக்கும் நல்லா தெரியும், தெரிஞ்சே அவங்க என்னை ஆஸ்பிட்டலுக்கு கூப்பிடறாங்க என்னை நீங்கதான் காப்பாத்தனும் மலரப்பா” என சொல்ல அவருக்கு சிரிப்பாக இருந்தது
”ஓ சரி சரி நான் சொல்றேன், நீ போப்பா அப்புறம் சாப்பாடு அருமையா இருந்தது ரொம்ப நன்றிப்பா” என சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி செல்ல அவன் சென்றதைக் கண்டு மலர் அங்கு வந்தாள்
”சரவணன் போயிட்டானா” என கேட்க சந்தியாவும் ஆமாம் என தலையாட்ட மலரோ கலகலவென சிரித்தாள் அதைக் கண்ட ரவியோ
”என்னம்மா இது விளையாட்டு பாவம் தம்பி பயந்துட்டார் பாரு”