(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”அப்பா அவர் நல்லதுக்குத்தான் சொல்றேன்பா, அவனோட அம்மா அவரை குழந்தை போல வளர்த்துவிட்டிருக்காங்க போல அதான் இப்படியெல்லாம் பேசி வைச்சிட்டுப் போறாரு, அவர் பேசறது நடந்துக்கறது பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுப்பா” என சொல்லி சிரிக்க ரவியோ

  

”சரி விடும்மா பாவம் அந்த தம்பி”

  

”அப்படியெல்லாம் விடமுடியாதுப்பா, நாளைக்கு அவருக்கு தடுப்பூசி போடத்தான் போறேன்” என சொல்லிவிட்டு உறங்கச் செல்ல அதைக்கண்ட சந்தியாவோ

  

”பாவம்ங்க அந்த தம்பி தெரியாத்தனமா இவள் கண்ல பட்டு இப்படி வசமா மாட்டிக்கிட்டானே எப்படியாவது அந்த தம்பியை காப்பாத்துங்க”

  

”காப்பாத்தறதா மலர் சொன்னது கேட்டல்ல தடுப்பூசி போடலைன்னா நோய் வரும்ல”

  

”இருந்தாலும்”

  

”மலர் சொல்றதுதான் சரி, ரொம்ப களைப்பா இருக்கு நான் போய் தூங்கறேன் சீக்கிரமா வந்து தூங்கு” என சொல்லிவிட்டு அவர் உறங்கச் செல்ல சந்தியாவும் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றார்.

  

இந்த பக்கம் சரவணனோ உறக்கத்தில் பினாத்திக் கொண்டிருந்தான்

  

”எனக்கு ஊசி வேணாம், அய்யோ மலரு வேணாம் வேணாம் என்னை யாராவது காப்பாத்துங்க அம்மா அம்மா” என உளற வைதேகி உலுக்கி எழுந்துப் பார்த்து தன் மகனின் உளறலைக் கேட்டு சிரித்தேவிட்டார்

  

”சரவணா சரவணா” என அழைக்க அவனோ உளறாமல் உறங்கத் தொடங்க அவரோ மென்மையாக அவனின் தலையை கோதிவிட்டார்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.