(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

பொழுதுவிடிந்ததும் வைதேகி கஷ்டப்பட்டு கோலம் போட்டுக் கொண்டிருக்க அதைக் கண்ட சந்தியாவோ

  

”வைதேகி என்னாச்சி உங்களுக்கு”

  

”முட்டி வலி அதான் முடியலை”

  

”அப்படியா நான் வேணா உங்க வீட்டு முன்னாடி கோலம் போடவா”

  

“இருக்கட்டும் பரவாயில்லை புள்ளி வைச்சிட்டேன் இனி கோலம்தான் போடனும், நானே பார்த்துக்கறேன் ஒண்ணும் பிரச்சனையில்லை” என சொல்லிவிட்டு கோலம் போட முயல முட்டிவலியால் முனகினார். அதைக்கேட்டபடி அரக்க பரக்க வந்தான் சரவணன்

  

”அம்மா ஏன்மா உனக்கு இந்த வேலை முட்டிவலியை வைச்சிக்கிட்டு உன்னை யாரு இவ்ளோ கஷ்டமான வேலையை செய்யச் சொன்னது”

  

”ஆச்சிடா புது வீட்டுக்கு வந்திருக்கோம், கோலம் போடலைன்னா நல்லாயிருக்காதே இங்க பாரு புள்ளி கூட வைச்சிட்டேன் இனி கோலம்தான் போடனும்”

  

”நீ ரொம்பவே பிடிவாதம் பிடிக்கறம்மா, நீயிரு கோலம்தானே நான் போடறேன்” என சொல்லியவன் அவசரமாக அக்கம் பக்கம் பார்த்தான், விடிகாலை என்பதால் பெரிதாக மக்கள் கூட்டம் இல்லை அதனால் அவசரமாக கோலம் போட அதைக்கண்டு சந்தியா வியந்தார். கோலம் போடாமல் சந்தியா வியந்தபடி நிற்பதை பார்த்தபடி வந்த ரவியும் மலரும் சரவணன் கோலமிடுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்கள். சரவணனும் அரக்க பரக்க கோலம் இட்டு முடித்தான் அவனுக்கு இது பழக்கம்தான், ஸ்ரீரங்கத்தில் இருந்த போது செய்வான் இப்போதும் அதையே செய்தான். கோலம் போட்டு முடித்து வெற்றிக்களிப்பில் சிரித்தபடியே நின்றவனின் பார்வை மலர் மீது விழுந்தது

  

”அய்யோ இவள் பார்த்துட்டாளே” என அலற அதற்கு வைதேகியோ

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.