(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”கூச்சப்படாத சரவணா அவள் உன்னை கிண்டல் செய்ய மாட்டா”

  

”நான் அதை சொல்லலைம்மா என்னைப் பார்த்தாலே ஊசி போட வான்னு கூப்பிடுவா, நான் போறேன் நீயும் இருக்காத வா வா உள்ள போலாம் வா” என தாயையும் இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல அவன் பேசியது நன்றாகவே மலருக்கும் கேட்டது. அவளோ கலகலவென சிரிக்க ரவியோ

  

”பாவம் மலரு அந்த தம்பியை இப்படியா பயமுறுத்தி வைச்சிருப்ப தப்புமா” என சொல்ல சந்தியாவும் மலரிடம்

  

”அங்க பாரு அம்மாவோட கஷ்டத்தைப் பார்த்து பொறுக்க முடியாம கோலம்லாம் போட்டு வைக்கறான், நீ என்னிக்காவது கோலம் போட்டிருப்பியா” என ஆதங்கப்பட அதற்கு மலரோ

  

”இப்ப என்ன நான் கோலம் போடனுமா சரி கொடு போடறேன்”

  

”பரவாயில்லை நீ ஒரு டாக்டர், நீ எதுக்கு இதையெல்லாம் செய்யனும் விடு விடு நானே பார்த்துக்கறேன், உனக்கு நேரமாச்சில்ல கிளம்பு ரெடியாகு” என சொல்ல மலரும் தன் தந்தையைப் பார்த்து

  

”நான் வீட்டு வேலை செய்யலைன்னு குறை சொல்றாங்க, செய்ய வந்தா வேணாம்னு சொல்றாங்க அம்மாவை என்னப்பா செய்றது” என கேட்க அதற்கு ரவியோ மென்மையாக சிரித்துவிட்டு

  

”இங்க நீ எப்படி வேணும்னாலும் இருக்கலாம் மலரு ஆனா, உன் புகுந்த வீட்ல நல்ல மருமகள்ன்னு பேர் எடுக்கனும் சரியா”

  

”அட போங்கப்பா எப்ப பாரு கல்யாணம்னு சொல்லிக்கிட்டு நான் ரெடியாகறேன் லேட்டாகுது” என சொல்லிவிட்டு அவள் ரெடியாக செல்ல அதைக் கண்டபடி வந்த சந்தியாவோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.