(Reading time: 16 - 31 minutes)
இறுதி வார்த்தை - தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

  

"உம்..." அந்த 'உம்'முடன் வாயை மூடிக்கொண்டான் கிழவன்.

  

கிழவி பயத்தாலும் வியப்பாலும் மௌனியாகிவிட்டாள். அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள், "கடவுளே, கிழவனைக் காப்பாத்து! இல்லேன்னா யாரு ஜனங்களுக்காக கவலைப்படுவாங்க?"

  

***

  

திடீரென்று ஒருநாள் கிழவன், "நான் சாகப் போகிறேன்" என்று சொன்னான்.

  

கிழவிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவளுடைய பயத்தை வெளிப்படுத்த வழியில்லை. அவள் பயத்தை வெளிப்படுத்தினால் கிழவன் சிரிப்பான், "சீ!" என்பான். அந்த அவமானத்திலே கிழவி செத்துப் போய்விடுவாள்.

  

"நீ ஏன் சாகணும்?" என்று மட்டும் கேட்டாள் அவள்.

  

"நான் சாகப்போகிறேன்... நான் அடிதடி செய்யச் சொல்லி வெளியில் இருக்கிற ஜனங்களைத் தூண்டிவிட்டதா சாஹு பாபுமார் சொல்றாங்க. நம்ம ஆளுங்க பாபுக்களோட ஆளுங்களை அடிச்சுட்டாங்க, பாபுக்களுக்கு ரொம்ப நஷ்டம் பண்ணிட்டாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் நடந்ததுன்னு பாபுமார் சொல்றாங்க.."

  

"அதுக்குப் பதிலா அவங்களுந்தான் நம்ம ஆளுங்களை நல்லா அடிச்சிட்டாங்களே!" ரத்தன் சொன்னான்.

  

புன்சிரிப்புடன் தலையை அசைத்தான் கிழவன். "அது மட்டும் இல்லே ரத்தன், நம்ம ஆளுங்க அடிச்சது பாவம். நான் செத்துக் கடவுள்கிட்டே போய், "கடவுளே, மன்னிச்சுக்கோ! எங்க ஆளுங்களோட பாவத்தை மட்டுமில்லை, பாபுமாரோட ஆளுங்களோட பாவத்தையும் மன்னிச்சுக்கோ-! அப்படீன்னு சொல்லப் போறேன்.. அப்பறம்.."

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.