(Reading time: 22 - 43 minutes)
சிறுகதை - துன்பம் போக்கும் அன்பர் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்
சிறுகதை - துன்பம் போக்கும் அன்பர் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்

வாடகையில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி யான வாடகைதான். ஆனால் ஏழைகளாயிருந்தால் வாடகை கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் ஏழைகள் தாம் என்று சத்திரத்து அதிகாரிகள் தீர்மானித்து விட்டால் போதும். வணிகர்களும் மற்ற தொழில் செய்பவர்களும் சத்திரத்துக்கு உள்ள வாடகையைக் கொடுத்து விட வேண்டியதுதான். அந்தக் காலத்து மக்களிடையே ஒரு நல்ல பண்பாடு இருந்தது. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. உழைத்து நாலு காசு சம்பாதிக்கக் கூடிய வலுவும் திறனும் உள்ள எவனும் தன்னை ஏழை யென்று கூறிக்கொள்ள மாட்டான். அவ்வாறு கூறிக் கொள்வதையோ, கூறப்படுவதையோ அவமானம் என்று கருதுவான். அற நிலையங்களிலே போய்க் கையேந்துவது தன் தகுதிக்குக் குறைவானதென்று கருதுவான். தான் அனுபவித்த வசதிக்குரிய கூலியைக் கொடுத்துவிட்டால் தான் அவன் மன அமைதியோடு இருப்பான்.

   

எதையும் சம்மா பெறக்கூடாது என்ற எண்ணம் அந்தக் காலத்து மனிதனின் பண்பாடாக விளங்கி வந்தது.

   

இந்த மாதிரியான சில பண்பாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அசோகரின் அறநெறி ஆட்சி நிலைத்திருக்க முடியுமா என்ன?

   

அசோகர் கட்டிய அந்தச் சத்திரம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ஆனால் அவர் மற்ற நகரங்களில் கட்டிய பெரிய பெரிய சத்திரங்களில் உள்ள எல்லா வசதிகளும் இந்தச் சத்திரத்திலும் இருந்தன.

   

குதிரைகள், ஒட்டகங்கள் கட்டுவதற்கான தனித்தனித் தொழுவங்கள், பசுமாடுகள் கட்டுவதற்கான கட்டுத் துறைகள் எல்லாம் பின் பக்கத்தில் இருந்தன. சத்திரத்தையடுத்த நந்தவனத்தில் குளிப்பதற்கான ஒரு கிணறும், மற்ருெரு மூலையில் குடி தண்ணிர்க் கிணறும் இருந்தன.

   

சத்திரத்தின் உள்ளே வழிப்போக்கர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கான அறைகளும் படுத்துறங்குவதற்கான கூடங்களும், சமைத்து உண்பதற்தான கட்டுக்களும் வசதியாக அமைந்திருந்தன. சுவர்களில் யாரோ ஒரு சாதாரணச் சித்திரக்காரன் புத்தர் பெருமானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வண்ணப் படங்களாக எழுதியிருந்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.