(Reading time: 11 - 22 minutes)
சிறுகதை - வாழ்க்கை - பிந்து வினோத்
சிறுகதை - வாழ்க்கை - பிந்து வினோத்

சிறுகதை - வாழ்க்கை - பிந்து வினோத்

   

"இது என்னோட அம்மா... எழுந்திரு..." என்று அடம் பிடித்து தன் தோழி என்றும் பாராமல் மூன்று வயது கோமதியை கிள்ளிய என் மகளை கண்டு எனக்கு கோபம் வரவில்லை மாறாக மனதில் சிறு சந்தோஷம் தான் உண்டானது. என் மேல் அவளுக்கு எவ்வளவு அன்பு! நான்கு வயதான போதும் நான் இருக்கும் போது என்னை விட்டு ஒரு வினாடி கூட நகர மாட்டாள். அவளை பொறுத்த வரை நான் அவளுக்கு மட்டும் சொந்தம்...

   

வலியில் அழுத கோமதியின் அழுகையில் என் சிந்தனை கலைந்தது. அவளை தூக்கி,

   

"போட்டுடா செல்லம்... அக்காக்கு நான் அடி கொடுக்குறேன்..." என்று ஒரு பேச்சுக்கு சொல்லி அவள் அழுகையை நிறுத்த முயன்றேன். அதற்குள் அவளுடைய அழுகை சத்தம் கேட்டு கோமதியின் அம்மா கவிதா வரவும், நடந்ததை சொல்லி,

   

"சாரி.." என்றேன்.

   

"நீங்க என்ன செய்வீங்க குழந்தை தானே.." என சொல்லிவிட்டு கோமதியை கூட்டி சென்றாள் கவிதா.

   

நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கணவர், "நீ நித்திக்கு ரொம்ப செல்லம் கொடுக்குறே அமுதா.." என்றார்.

   

நான் என்ன என்பது போல் பார்க்கவும். "அவள் செஞ்சது தப்பு தானே... நீ உடனே அவளை கண்டிக்க வேண்டாம்?"

   

"ப்ச்... விடுங்க அரவிந்த்.. அவள் குழந்தை தானே... வளர்ந்தால் எல்லாம் சரியா போகும்.. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு செல்லம் தானே..." என்று நித்திலாவை தூக்கி முத்தமிட்டேன்.

   

என்னிடம் இதை பற்றி பேசி பிரோயஜனம் இல்லை என்பதை உணர்ந்திருந்ததால், அந்த பேச்சை அத்தோடு விட்டு விட்டு, "இன்னைக்கு அம்மா கிட்ட பேசினேன் அமுதா..." என்றார்.

   

அரவிந்த் என்ன எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு தெரியும். எனக்கும் என் மாமியாருக்கும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.