மீண்டும் சஞ்சயின் நினைவு வந்தது. அவனுடைய எதிர்கால கனவுகள் பற்றி அவன் பேசியது நினைவில் வந்தது. அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை அறிந்துக் கொள்ள முடியாத நமக்கு தான் எத்தனை எத்தனை கனவுகள் எத்தனை எத்தனை ஆசைகள்? நாளை நாளை என்று வாழாமல், ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து வாழ்வது தான் சிறந்தது என்பது உரைத்தது.
இது புரியாமல் சண்டை, கோபம், என்று மற்றவரையும் வருத்தி நம்மையும் வருத்தி கொள்வது எவ்வளவு பெரிய தவறு.
தாமரை, இரண்டு நாட்களுக்கு முன் சொன்னது நினைவில் வந்தது.
"நல்ல வேளைப்பா, ஹாஸ்பிட்டல்ல இருந்து சஞ்சய் போன் செய்து இவங்க ரெண்டு பேர் கிட்டேயும் பேசினான். எப்போதும் போல அன்னைக்கும் அவன் கிளம்பும் போது சண்டையாம்... அவன் மட்டும் பேசி இருக்கா விட்டால், இவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க, அவன் என் மேல கோபமா இருந்திருப்பானே, ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாமல் போச்சேன்னு வருத்த பட்டே தான் வாழ்ந்திருக்கனும்.."
நித்திலாவை கூட்டிக் கொண்டு வீட்டை அடைந்ததும், அவளுக்கு உண்ண சிற்றுண்டி கொடுத்து விட்டு, என் கைபேசியை எடுத்து அரவிந்தின் அம்மாவின் எண்ணை தட்டினேன்.
"ஹலோ..." என்று அந்த பக்கம் என் மாமியாரின் குரல் கேட்டது. சற்றே எழுந்த தயக்கத்தை உதறி விட்டு,
"ஹலோ அத்தை, நான் அமுதா பேசுறேன்... எப்படி இருக்கீங்க? உங்க கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆச்சு...."
அந்த பக்கம் சில வினாடிகள் சத்தம் இல்லை, அது ஆச்சர்யத்தினால் என்பது எனக்கு புரிந்தது.
"நான் நல்லா இருக்கேன் அமுதா... நீ எப்படி இருக்க?" என்று சில வினாடிகளில் தன்னை